LANKASRI இணையதளத்தில் வெளிவந்த செய்தி:
இஸ்ரேலில் உள்ள காசா பகுதியை ஆக்கிரமித்து பாலஸ்தீன தீவிரவாதிகள் அங்கு அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். எனவே, அவர்களை அடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.நேற்று முன்தினம் காசா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 15 வயது சிறுவன் உள்பட பாலஸ்தீனியர்கள் 3 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். தெற்கு இஸ்ரேல் பகுதியில் நேற்று மாலை சக்தி வாய்ந்த 2 ராக்கெட் குண்டுகளை வீசினர். இக்குண்டுகள் தெற்கு ஆஷ்கெலானில் விழுந்து வெடித்தது. இதில் யாரும் உயிரிழக்கவில்லை. சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
LANKASRI இணையதளத்திற்கு கண்டனம்:
தயவுசெய்து இதுபோல செய்திகளை திரித்து எழுதாதீர்கள். உங்களுக்கு வரலாறு என்ன என்று தெரியுமா? யூதர்களுக்கு உலகில் ஒரு நாடே கிடையாது. யூத பயங்கரவாதிகள் தான் பாலஸ்தீன் என்ற நாட்டை அபகரித்து பாலஸ்தீன் மக்களை கொன்று குவித்து இஸ்ரேலில் என்ற நாட்டை உருவாகினார்கள். நீங்கள் எல்லா இஸ்லாமிய போராளிகள் அமைப்பையும் தீவிரவாதிகளாக எழுதுகிறிர்கள். காசாவில் இருக்கும் அமைப்புகள் எல்லாம் போராளிகள் குழுக்கள். உங்களுடைய எழுத்துகள் மிகவும் கண்டனத்துக்கு உரியது. நீங்கள் நடுநிலையோடு செய்திகள் வெளியிட வில்லை.முஸ்லிம் விரோத சிந்தனையோடு உங்கள் எழுத்துகள் உள்ளது. நீங்கள் bbc தமிழ் போன்ற மேற்குலக பத்திரிகைகள் கூட இந்த அளவுக்கு மோசமாக எழுதத் துணியாத செய்திகளை ஒரு தமிழ் பத்திரிக்கையாக அதுவும் ஒரு தமிழ் ஈழ இன போரட்டத்தை ஆதரித்து எழுதும் நீங்கள் காசாவின் சுதந்திர போராட்டத்தை தீவிரவாதமாக எழுதும் உங்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டியது உள்ளது. நீங்கள் தாவுது இப்ராஹீம் பற்றி எழுதும் பொது தீவிரவாதி அவன் இவன் என எழுதி உள்ளீர்கள். நீங்கள் குஜராத் கலவரத்தை நடத்திய நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத அமைப்புகளையும் இப்படி எழுதுவீர்களா? இந்த தீவிரவாத அமைப்புகள் எவ்வளவு அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது தெரியுமா? பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம் இதுதான் தாவுது இப்ராகிம் போன்ற ஆட்கள் தோன்ற காரணம்.உங்களுடைய எழுத்துக்கள் ஒரு தமிழ் ஈழ போராளியின் எழுத்துகள் மாதிரி இல்லை.தயவுசெய்து இது மாதிரி எழுதுவதை நிறுத்துங்கள்.சிங்கள இன தீவிரவாதத்தை விட உங்கள் எழுத்து தீவிரவாதம் மிகவும் மோசமானதாக உள்ளது காசாவில் நடக்கும் இன போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிக்க உங்களுக்கு எப்படி மனம் வந்ததோ.
PUTHIYATHENRAL
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்