Breaking News
recent

(அ)சிங்கத்தின்(?) புலம்பல்.

மும்பை: 'இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வரட்டும், ஆஸ்திரேலியர்கள் வரட்டும், தீவிரவாதிகளும் வரட்டும்' என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே விரக்தியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து முன்கூட்டியே நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இது யார் தலையிலும் ஏறவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று கேட்டுள்ள தாக்கரே,

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆஸி மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு சிவசேனா விதித்திருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பால் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'ஆஸ்திரேலியா வில் இந்தியர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் வகையிலும், நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்திலும் தான் அவர்கள் இந்தியாவுக்கு வரக்கூடாது என நாங்கள் கூறினோம்.

ஆனால் தற்போது நம்முடைய சகோதரர்கள் மத்தியில் இருந்தே, இந்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு கோரப்படுகிறது. நமது இந்த அறிவிப்பு ஆஸ்திரேலியாவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார்கள். அதன் பிறகு நாம் மட்டும் எதற்கு பிடிவாதம் பிடிக்க வேண்டும்?.

நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர்களை இந்தியாவுக்குள் வரவேண்டாம் என சொல்கிறோம். உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களை இந்தியாவுக்கு கூப்பிடுகிறார்.

இதன்மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ள போதிலும், அப்படி நடந்தால் அதை நாங்கள் பாகிஸ்தானுக்கு எடுத்துக் காட்டுவோம் என்று ராணுவ அமைச்சர் கூறுகிறார்.

யாருக்கு கரிசனம் காட்டுகிறார்களோ அவர்கள் மூலமாகவே குண்டு வெடித்தால் தான் அரசாங்கத்தினர் உணருவார்கள். ஆனால் அப்போது உணர்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.

இதெல்லாம் அவர்களுக்கு புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். ஆஸ்திரேலியர்கள் வரட்டும், பாகிஸ்தானியர் வரட்டும், தீவிரவாத பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் வரட்டும், ஊடுருவல்காரர்களையும் அனுமதிக்கட்டும்.

நாங்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்லத் தான் முடியும். அது அவர்கள் தலையில் ஏறவில்லை என்றால் நம்மால் என்ன செய்ய முடியும்?.

இத்தாலிய இளவரசன் ராகுல் காந்தி மும்பை வந்தபோது அவரின் செருப்புகளை தூக்கிக் கொண்டு அலைந்தாரே உள்துறை அமைச்சர் ரமேஷ் பாகவா, அவரிடம் புனே குண்டுவெடிப்பு இடத்தை காட்டி மக்கள் கேள்வி கேளுங்கள்' என்று சூடாக எழுதியுள்ளார் பால்தாக்கரே.
மேலும், ஷாருக்கானிடம் விளக்கம் கேட்கும் வகையில் பால்தாக்கரே குறிப்பிடுகையில்,
'பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் விளையாட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். புனேயில் குண்டு வெடித்திருக்கும் இந்த நிலையில் அவர்கள் சொன்னது சரிதானா? என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் வீரர்கள் மீது மிகவும் பற்று கொண்டுள்ள ஷாருக் கான் இப்போது என்ன சொல்ல போகிறார்? இப்போதும் பாகிஸ்தான் வீரர்களிடம் விளையாட வேண்டும் என்று அவர் சொல்கிறாரா?.

புனே குண்டு வெடிப்பில் பலியானவர்கள் உறவினர்களை ஷாருக் கான் சந்தித்து, என்னிடம் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி கேட்கட்டும்.

சிவசேனா மீது குறி வைத்து அலைந்த போலீசார் இப்போதும் ஷாருக் கான் பங்களா முன் அமர்ந்து சப்பாதி குருமா சாப்பிட்டு கொண்டிருக்கட்டும். ஷாருக் கான் படத்தை பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் எல்லாம் வேண்டுமானால் பாகிஸ்தான் சென்று என்னை பற்றி இழிவாக பேசட்டும்.

ஷாருக் கான் படம் பாதுகாப்புக்கு ஒட்டு மொத்த போலீசையும் அனுப்பியதால் புனேயில் பாதுகாப்பு இல்லை. இதனால் தான் குண்டு வெடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
(ராகுல் கொடுத்த குட்டில் சிங்கம்(?)தலை கிறுகிறுத்துப்போய் ஏதேதோ உலரிக்கொட்டிக்கொண்டிருக்கிறது.இந்த (அ)சிங்கத்தின் பல் புடுங்கப்பட்டுவிட்டது.இனி இந்த அசிங்கம்(மனித) மாமிசம் சாப்பிட முடியுமா?)
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.