Breaking News
recent

கல்வியில் பெருமை சேர்த்த பெண்

சென்ற 22-03-2010 ஞாயிறன்று திருச்சி ஐமான் கலை அறிவியல் பெண்கள் கல்லூரியின் ஏழாமாண்டு பட்டமளிப்பு விழா சிறப்புற நடைபெற்றது. தம் அருமைப் பெண் செல்வங்களின் கல்வி முன்னேற்றத்தை விழாக் கோலத்தில் கண்டு மகிழ ஏராளமான பெற்றொர் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து ஐமான் கல்லூரி வளாகத்தில் குழுமியிருந்தனர்.


மாலை சுமார் நான்கு மணியளவில் பட்டமளிப்பு விழா, முஸ்லிம் லீக் தலைவர் பேரா. கே. எம். காதர் முகைதீன் அவர்களின் முன்னிலையில் தொடங்கிற்று. வழக்கமான தொடக்க நிகழ்வுகளுக்குப் பின்னர், பட்டமளிப்பு நிகழ்ச்சி தொடங்கிற்று.

அதில் முதலாவதாகப் பட்டத்தைப் பெற்று மகிழ்ந்தவர், ஜித்தாவில் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணியாற்றும் ஹாஜி அ.மு.க. அஹ்மது அமீன் அவர்களின் செல்வப் புதல்வியான சித்தீகா என்ற மவ்ஜூதா ஆவார்.

இச்செலவப் புதல்வின் தெரிவுப் பாடம், Nutrition & Dietetics என்பதாகும். இப்பாடப் பிரிவில், செல்வி மவ்ஜூதா மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக (Bharathidasan University Gold Medalist) ஏற்றம் பெற்றிருந்தார்! அதைக் கண்ட அதிரைவாசிகளின் அகமகிழ்வுக்கு அளவேயில்லை! அடுத்த நாள் நிகழ்ந்த பாராட்டு விழாவில் நம் சித்தீகாவுக்குச் சிறப்புப் பரிசில்களும் கணிசமான பணப்பரிசும் வழங்கப்பட்டன. கல்வி உயர்நிலையும் பாராட்டும் பரிசில்களும் பெற்றுத் தன் பெற்றோர்களையும் உற்றார் உறவினர்களையும் ஊர்வாசிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அன்புச் செல்வி சித்தீகா, நம் அனைவரின் மனமார்ந்த பாராட்டிற்குரியவர் ஆகின்றார். எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்புகளைப் பெற்று, இம்மை-மறுமை வாழ்வில் வெற்றியடைய, செல்வி சித்தீகாவை மனமார வாழ்த்துகின்றோம்!

தகவல்: அதிரை அஹமத்
Abu Khadijah

Abu Khadijah

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.