Breaking News
recent

தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி

சென்னையில் கடைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, அடுத்த மாத்த்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வணிகர்களுக்கு உதவியாக பல்வேறு ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ்ப் பெயர்கள் அடங்கிய 537 பெயர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், அதன் பிறகு மற்ற மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி மே 31-ந் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஜோதி நிர்மலா, மண்டல குழு தலைவர் ஏழுமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகி விக்கிரமராஜா, போட்டோ ஸ்டூடியோ என்பதுதான் மக்களுக்கு புரியும். அதை நிழற்பட நிலையம் என்று பெயர் வைத்தால் தெரியாது என்றார்.

அதற்கு பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியம், போட்டோ ஸ்டூடியோ என்பதை தமிழில் எழுதினாலே 75 சதவீதம் வெற்றிதான் என்றார்.

கூட்டத்தில் மேயர் பேசுகையில்,

தமிழ் வளர, மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் தாய்மொழியான தமிழுக்கு பிரதான இடம் இல்லாத நிலையே உள்ளது. தமிழ் மேம்பட தமிழ் வளர்ச்சி துறை உருவாக்கப்பட்டது. அந்த துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.

சென்னையில் பூந்தமல்லி ரோடு, அண்ணா சாலையில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை. மற்ற மாநிலங்களில் அவர்களது தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிறகு மொழிகளுக்கு முதலிடம் கொடுத்துள்ளார்கள்.

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் பெயர் பலகைகளில் முதலில் தமிழில் பெரிதாக எழுதப்பட வேண்டும்.

ஏர்டெல், டோக்கோமோ போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட வேண்டும்.இல்லாவிட்டால் அந்த நிறுவன பெயர் பலகைகள் அகற்றப்படும் என்றார் அவர்.

கூட்டத்தில் 537 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் மாநகராட்சி விநியோகித்தது.

அதில் சில:

பார்- மது கூடம், அருந்தகம், பஜார்- கடை தெரு, கடை வீதி, கம்ப்யூட்டர் சென்டர்- கணினி மையம், கூல்டிரிக்ஸ்- குளிர்பானங்கள், குளிர் குடிநீரகம், டிபார்ட்மென்டெல் ஸ்டோர்- பல்பொருள் அங்காடி, எலெக்டிரிக்கல்ஸ்- மின் பொருளகம், எலெக்ரானிக்ஸ்- மின்னகம், மின்னணு பொருளகம்.

பனி குழைவு - அணியபாட்டு

என்ஜினீயரிங் இண்டர்ஸ்டிரீஸ்- பொறியியல் தொழிலகம், பேன்சி ஸ்டோர்- புதுமை பொருளகம், பாஸ்ட் புட் -உடனடி உணவு, விரைவு உணவகம், ஐஸ்கிரீம்- பனிகுழைவு, பனி பாலேடு, போட்டோ ஸ்டூடியோ- நிழற்பட நிலையம், பிளாசா- கடை தொகுதி, ரெடிமேட் சென்டர்-அணியபாட்டு கடை, ஸ்நாக்ஸ்- நொறுக்கு தீனி, ஸ்டார் ஓட்டல்- நட்சத்திர உணவகம், உயர் உணவு உறைவுலகம், ஸ்வீட்ஸ் ஸ்டால்- இனிப்பகம், டியூசன் சென்டர்- தனி பயிற்சி நிலையம்.

படம்:தினமலர்
நிர்வாகி

நிர்வாகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.