அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. நைனாவும் ,அவர் அண்னாவும்(சகோ.ரபியாவும்)அனுப்பிய மின்னஞ்சலில் வந்த சுவாரசியமான இந்த நகைச்சுவை கட்டுரை-முஹம்மது தஸ்தகீர்).
அஸ்ஸலாமு அலைக்கும் .
யாம்ப்பா உவ்ளோவ் அவசரப்பட்டு நோம்பைய்யும் நோம்புலே நீங்கல்வோ செஞ்ச சேஷ்டைகளையும்
நினைவுகூரிநீர்கள் ?
ஒவ்வரு காலகட்டத்திலும் ஒவ்வரு வகையான சேட்டை.பதுருப்படையிலே வேற்று முஹல்லா/பள்ளி
பேரச்சொல்லி ரொட்டி வாங்கினதும் ,சொந்தக்கார வூட்டு வாசல்லே நிண்டுக்கொண்டு கொரலை மாற்றி கொண்டு கேட்டதும் பிறகு அந்நிய சக்தி ஊடுருவல்-எல்லை தாண்டிய தகராறு ...என்னத்த சொல்ல என்னத்த விட ?சில வூட்லே ரொட்டி சுட்டா யாரவது இறந்து போய்விடுவாங்கன்னு(?!) பயப்பட்டு வெள்ளடை சுட்டுதருவாங்க . அதெ அங்கேயே அவங்க வூட்டு வாசல் தாண்ட மும்பே ஸ்வாஹா!!! தேங்காய்- வாழைப்பழம் களவு . கிளி தட்டு விளையாடி களைப்பாய் வரும் போது வித்ருக்கு போடற தேத்தண்ணியை சிபாரிசு அடிப்படையில் வாங்கி குடிக்கும்போது.... ஆஹா... ருசி!
"இன்று விசேஷக் கஞ்சி "என்று சுவற்றில் ஒருவன் எழுத ..எழுத்துப்பிழை வர(யாரோ திருத்தி சில்மிஷம் செய்ய) எவன்டா இதை எழுதியது என பெரிசுகள் வினவ ...ஒரே ரகளை.இன்று BEEF கஞ்சி .
.ஒரு கன்டுக்குட்டியை பள்ளிவாசலில் எல்லோரது பார்வைக்காக கட்டியாகிவிட்டது.
லுஹர் தொழ்துகொண்டிருக்கும்போது அது அறுத்துக்கொண்டு ஓடிருச்சி .. புடி புடி ...புடீ......!
நோம்பு திறக்க பேரீச்சம்பழத்திற்கு கொட்டை எடுக்கச்சொல்லி பார்லப்பா தர.. அதுலே பாதிக்கும் மேலே நாங்கதல்லிணத்தை சொல்லமுடியாது.
கஞ்சி சிட்டி /தாளத்தில் பரிமாறப்பட்டது சட்டி கோப்பை என்றானது. அதுபோல தண்ணீர் களையான்
தண்ணீர் பாக்கட்டானது.
kapaadi, கிளித்தட்டு பம்பாரம் laakku, பளிங்கி pondra ஒலிம்பிக் நிகரான வீர தீர விளையாட்டுக்கள் நோம்பில்தான் அரங்கேறும்.
ராத்திரியிலே மெயன்றோட்டுக்கு ரோஸ்ட்டு திங்க சொல்லாம போனவனை அன்னியனைப்பாற்பது போல் பார்ப்பது.-சண்டை போட்டு உறவாய் போன புதிதில் வாங்கப்பா/போங்கப்பா என்று விளம்பிக்கொள்வது.... சண்டாளா .....எல்லா நினைவுகளையும் குத்திக் கீரிகிளரி.......விட்டுட்டு ,,,ஒன்னுமேத் தெரியாத மாதிரி உலகெங்கும் இப்படி பிரிந்து கிடக்கின்றாயே .......நல்லா இருப்பா..நல்லாறு!.
RAFIA-JEDDAH
*************************************************************************************
கோடிகள் பல கொட்டிக்கொடுத்தாலும் திரும்பி வராதஅந்த காலமும், பள்ளிவாசல் தேத்தணியும்.
பதுருப்படைக்காக தெருதோறும் படையெடுத்துச்சென்றதும்.
மட,மட பெருநாள் வேட்டியும், மாசற்ற ஹவுது தண்ணியும்.
இரவுக்காற்றில் கரைந்து வரும் பள்ளிகளின் (ஹிஜ்பு) குர்'ஆன் வசனங்களும்.
ஊருக்கே அலாரம் வைத்தது போல் உரங்கும் எல்லோரையும் சஹரு நேரத்தில் தட்டி எழுப்பும் "சவுரு பக்கிர்சாவும்".
ரால் புதைத்த வாடாவும், நா ருசிக்க சம்சாவும். இவை யாவையும் பிய்த்து போட்டு ஊற வைத்த நோன்புக்கஞ்சியும். மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல இஃப்தார் நேரத்திற்காக காத்திருக்கும் நாமும்.
பகல் நேரப்பசியில் பல வழியில் சேர்த்த திண் பண்டங்களும், பசி தீர்ந்த பின் (நோன்பு திறந்த பின்) தீண்டாமல் போகும் திண்பண்டங்கள் யாவும்.
தராவீஹ் நேரத்தில் செய்த சிறு,சிறு குசும்புகளும்.
அன்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் போல் ஆங்காங்கே முளைக்கும் வாடா, சம்சா மற்றும் கடைகளும் வரியவர்களின் பசி போக்கும்.
எங்கிருக்கிறோம் நாம் இன்று? திரும்பி வருவது எக்காலம்?
இனிய நம் நோன்பு கால நினைவுகளை உசுப்பேத்தியவனாக.
என்றும் அன்புடன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது

crown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்