Breaking News
recent

நல்லதொரு தீர்ப்பு

முஸ்லிம் பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக டி.ஸி (Transfer Certificate) கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நடந்தது பிரான்ஸிலோ அல்லது டென்மார்க்கிலோ அல்ல. கேரளாவின் ஆலப்புழாவில் தான்.இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கிற்கு எதிரொலியாக, பள்ளியின் பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்யுமாறு கடந்த சனிக்கிழமை, 05-06-2010 அன்று அழைப்பாணை (சம்மன்) அனுப்பி, கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றின் பிரின்ஸிபலாகப் பணிபுரியும் மேரி ஜெஸிண்டா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேரி ஜெஸிண்டா எதிர்வரும் ஜுலை 31 ந்தேதிக்குள் நீதிமன்றத்திற்கு ஆஜர் ஆகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதன்மை நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிபதியான முஹம்மத் வஸீன், இது தொடர்பான அழைப்பாணையைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன், நபலா என்ற பத்தாம் வகுப்புப் பயிலும் முஸ்லிம் மாணவி, தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்தால் டி.ஸி கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு "பள்ளியின் சீருடைக்கு இது முரணாக உள்ளது" என்ற காரணம் காட்டப்பட்டது.

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு முடியும் வரையிலாவது தனது மகளைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பள்ளி நிர்வாகம் கறாராக மறுத்து விட்டது என்கிறார் மாணவி நபலாவின் தந்தை நஜீர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவி நபலாவின் தந்தை நஜீர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததை அடுத்து நடைபெற்ற தொடர் விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு இ.பி.கோ 504 (அமைதியைக் குலைக்கும்படியான அவமதிப்பைச் செய்தல்) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் பிரின்ஸிபலை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இவ்விஷயம் அதிக சர்ச்சைக்கு உள்ளானதால், தீர்வு காணும் பொருட்டு மாவட்ட ஆட்சியாளர் பி. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் கடந்த மாதம், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்தபிறகு, மாணவி நபலாவை மீண்டும் தமது பள்ளியில் இணைந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை நிராகரித்துள்ள மாணவி நபலா தற்போது வேறு பள்ளியில் பயின்று வருகிறார்
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.