Breaking News
recent

இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஒருதலை பட்சமானது: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹ்மத்.

துபாய்:'இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஒருதலை பட்சமானது' என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகக் கமிட்டி தலைவருமான அனீஸ் அஹ்மத் கூறினார். எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக துபாயில் வைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ’வளர்ந்துவரும் இந்தியா மாயையும் எதார்த்தமும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும் பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

"ஒரு புறம் இந்தியாவின் வளர்ச்சியின் இனிப்பை மேல்தட்டு வர்க்கம் சுவைக்கும் பொழுது மறுபுறத்தில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்படுகிறார்கள். எதிர்காலத்தில் சூப்பர் பவராக மாறும் என கருதப்படும் இந்தியாவின் மறைத்துவைக்க முடியாத உண்மைதான் உலகிலேயே அதிகம் பேர் பட்டினியால் வாடும் தேசம் என்ற சிறப்பு.
இந்தியாவில் மிகவும் பிற்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்கள் அரசின் இரட்டை நிலைக்கும், பாரபட்சத்திற்கும் இரையாகின்றனர். மதசார்பற்ற கட்சிகளாக வேடமிடுவோரின் வஞ்சனைக்கும் பாத்திரமாகின்றார்கள்.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சக்திப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்". இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார். எமிரேட்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம் துணைத்தலைவர் முஹம்மது தல்ஹா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தலைவர் அப்துல் ரஸ்ஸாக் தலைமை வகித்தார். செய்யத் அஃப்ஸர் நன்றி தெரிவித்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
PUTHIYATHENRAL

PUTHIYATHENRAL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.