Breaking News
recent

ஜூலை4மாநாடு:இலட்சக்கணக்கில் முஸ்லிம்கள்;ஸ்தம்பித்தது சென்னை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை தீவுத்திடலில் மிஸ்ரா கமிஷனை அமல் படுத்தக்கோரி இன்று(ஜூலை4 ஞாயிறு) மாபெரும் பேரணி மற்றும் மாநாடு ந‌ட‌த்திய‌து.


மாநாட்டு துளிகளும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர் படையின் திட்டமிட்ட வேலைகளும்:
இந்த மாநாட்டில் இலட்சக் கணக்கில் மக்கள் குழுமினர்.



சென்னையின் போக்குவரத்து ஸ்தம்பித்து.


காவல் துறைக்கு எந்த வேலையையும் வைக்கவில்லை


பொது மக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமலும் பேரணி, மாநாட்டுக்கு வந்தவர்களையும் சிரமப்படாமல் செயல் பட்டது.


இலட்சக்கணக்கில் மக்கள் கூடிய போதும் எந்த பதட்டமோ பரபரப்போ இல்லை.


காணாமல் போனவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தது.

இன்னும் இன்னும் எத்த‌னையோ....பாராட்டுக்கள்...!



ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் இன்னும் ஊனமுற்றோர் என அனைவரும் வயது வித்தியாசம் இல்லாமல் பல சிர‌மங்களையும் பாராமல் ஏன் இவ்வளவு தூரம் வந்தார்கள்...?



ஒன்றே ஒன்றுதான் உரிமை ... இடஒதுக்கீடு!





ஆம்! இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது மட்டுமின்றி தொடர்ந்து உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்ததுடன் கிடைத்த எல்லா நல்ல வாய்ப்புகளையும் வேண்டாமென்று புற‌ந்தள்ளி விடுதலை ஒன்றே குறிக்கோள் என போராடி, விடுதலை அடைந்தப்பின்னர் ஒன்றுமில்லாமல் இருப்பவர்கள் முஸ்லிம்கள்தான்.



இதுதான் மாநாட்டின் குறிக்கோள், இலக்கு !



காங்கிரஸுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!




மாநாட்டில் மவ்லவி. பி. ஜைனுல் ஆபிதீன் அவ‌ர்கள் இறுதியுரையாற்றினார்.



அதில், மிஸ்ரா க‌மிஷனை காங்கிரஸ் அரசு உட‌னே அம‌ல் ப‌டுத்த‌வேண்டும்.

ம‌த்திய‌ காங்கிர‌ஸ் கூட்டிணிய‌ர‌சுக்கு முட்டு கொடுத்துவ‌ரும் க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளும் அழுத்த‌ம் கொடுக்க‌வேண்டும்.



அப்ப‌டி மிஸ்ரா க‌மிஷ‌னின் ப‌ரிந்துரையான‌ முஸ்லிம்க‌ளுக்கு இடஒதுக்கீட்டை காங்கிர‌ஸ் அர‌சு அம‌ல் ப‌டுத்தாவிட்டால்.

காங்கிரஸுக்கு ஒரு வோட்டுக்கூட‌ போட‌ மாட்டோம்; முஸ்லிம்க‌ளையும் போட‌விட‌மாட்டோம்!






அனால், இட‌ஒதுக்கீட்டை ச‌ட்டமாக்கி த‌ந்தால் நாங்க‌ள் வோட்டு போடுவ‌துட‌ன்,முஸ்லிக‌ளின் வோட்டையும் பெற்றுத்த‌ருவோம்.என்றார்



இந்த‌ இர‌ட்டை உறுதிமொழியை இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் அல்லாஹ் அக்ப‌ர்(அல்லாஹ் மிக‌ப்பெரிய‌வ‌ன்) என்று கோஷமிட்டு ஏற்றுக்கொண்ட‌ன‌ர்.

இவர்களைப்பார்த்தால் ஒருநாள் நிகழ்ச்சி முடிந்தது என்று சோர்ந்து போகும் கூட்டமாக தெரியவில்லை.




கொடுக்க‌வில்லை என்றால் எடுத்துக்கொள்வோம், என்ற‌ உறுதி ஒவ்வொருடைய‌ க‌ண்களில் இருந்து தெரிகிற‌து....
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.