
இவ்வருடம் குர்பானி கொடுப்பவர்கள் அதன் தோள்களை எந்த ஒரு இயக்கங்களுக்கும கொடுக்காமல் இன்று வரை எந்த வித பொருளாதார பின்னணியும் இல்லமால் இன்றுவரை பொருளாதார சிக்கலில் நடந்து வரும் நமதூர் எத்தீம் கானா மதரசாவிற்கு தங்கள் வீடுகளில் அறுக்கும் ஆடு மாடு ஒட்டகையின் தோள்களை தந்து இங்கு பயிலும் ஆதரவற்ற பிள்ளைகளின் மார்க்க கல்விக்கு உதவிடுவது தான் சரியான வழியாகும் .
அதை விடுத்து மற்ற இயக்கங்களுக்கும், கழக , ஜமாத்துகளுக்கும் ,லீகுகளுக்கும், கொடுப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை மாறாக இவர்கள் பண்ணும் போஸ்டர் யூத்தங்களுக்கும் இன்னபிற தேவையற்ற செயல்களுக்கும் தான் நாம் கொடுக்கும் உதவிகளை பயன்படுதுகிரார்களே தவிர எந்த ஒரு நன்மையான கரியங்களுக்குகாக பயன்படுவதாய் எமக்கு புலப்படுவது இல்லை .
எனவே தங்கள் வீடுகளில் அறுக்கும் குர்பானி தோள்களை நமதூர் எதும் கானா மதரசாவிற்கு கொடுத்து ஆதவற்ற பிள்ளைகளின் மார்க்க உலக கல்விக்கு உங்களது பங்கை அளித்து நீங்கள் கொடுக்கும் குர்பானியை இறைவனிடத்தில் ஏற்ற மிக்கதாக்கி கொள்ளுங்கள்.
மேலும் அதிரை பைத்துல் மால் எண்ணிலடங்கா பல நல்ல உதவிகளை செவ்வனே செய்தது வருவதை யாராலும் மறுக்க மறக்க இயல்லாது எனவே பைத்துல் மால் நிர்வாகிகள் இந்த எத்திம்கானவிற்கு இவ்வருடம் தாங்கள் அறுத்து குர்பானிகொடுக்கும் தோள்களை மேற்கண்ட மதரசாவிற்கு வழங்கிட ஆவன செய்ய வேண்டுகிறேன் . அல்லாஹ் உங்களது ஹலாலான தேவைகளை பூர்த்தி செய்வானாக ஆமீன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்