Breaking News
recent

ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம் - டாக்டர் ஹனீப்


ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு நவம்பர் 21 முதல் 28 வரை தேசிய பொது சுகாதார வாரம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்து இருந்தது.
.
சுமார் 110 கோடி மக்கள் வாழும் நம் இந்தியா திருநாட்டில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழவும் அதன் மூலம் நம் தேசம் வலிமை பெறவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு தழுவிய பிரச்சாரத்தை கையில் எடுத்தது.
அதிரை நகரில் இதன் துவக்கமாக நவம்பர் 21-ம் தேதி அன்று மாலை 4.00 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுகாதார விழிப்புணர்வு பேரணியை அதிராம்பட்டினம் நகர தலைவர் U.அப்துர் ரஹ்மான் தொடங்கி வைத்தார் பேரணி தக்வா பள்ளிவாசல் அருகிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தை அடைந்தது அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக A.T.அப்துல்லாஹ் மற்றும் முகம்மது ஹனிஃபா அவர்கள் உரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து,நவம்பர் 22,23 தேதிகளில் மாலை 4:30 மணியளவில் ஜும்ஆ பள்ளி பின்புறமுள்ள மைதானத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.

ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம் - டாக்டர் ஹனீப்
பொதுசுகாதார வாரத்தின் நிறைவு நாளான நவம்பர் 28 ஆம் தேதியன்று அதிரை காவல் நிலையம் எதிரேயுள்ள சமுதாயக் கூடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமும், முகாமின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் ஜலாலுதீன் தலைமையில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைப்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய Dr. முஹம்மது ஹனீப் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பொது சுகாதார வார சிறப்பு நிகழ்ச்சிகளை பாராட்டியதோடு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அளவான உணவும் முறையான உடற்பயிற்சியும் அவசியம் என வலியுருத்தினார். மேலும் அதிரை அன்வர், சமூக ஆர்வலர் முஹம்மது ஹனீபா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கருத்தரங்கை A.T. அப்துல்லாஹ் அவர்கள் நெறிப்படுத்தினார்.

mohamed

mohamed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.