Breaking News
recent

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பா.ஜனதா ஆட்சியில் அதிகமான முறைகேடு!

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான் அதிக முறைகேடுகள் நடந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

பாராளுமன்ற மேல் சபை எம்.பி. ராஜீவ்சந்திரசேகர், கடந்த வாரம் ஒரு தகவல் வெளியிட்டார். அதில் அவர், “தொலை தொடர்புத் துறையின் புதிய கொள்கையால் டாடா நிறுவனம் அதிக பலன் பெற்றுள்ளது. டாடா நிறுவனத்துக்கு சாதகமாக ஆ.ராசா நடந்து கொண்டார்” என்று கூறி இருந்தார்.
ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் அளித்து தொழில் அதிபர் ரத்தன் டாடா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரையும், ஆளும் கட்சியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் கடிதத்தில் தெரிகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

டாடா தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ஆ.ராசாவோ அல்லது முந்தைய அந்த துறை அமைச்சர்களோ எந்த வகையிலும் எந்த சலுகையையும் காட்டவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான 2008-ம் ஆண்டு கொள்கை, விலையை ஒழுங்குப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்துள்ளது.

தொலைத் தொடர்பு கொள்கை கள் அமல்படுத்தப்படுவது தாமதமாகி வந்தது. அதையும் 2008-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் கொள்கை உடைத்துள்ளது.

உண்மையைச் சொல்லப் போனால், தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கொள்கை களில் பா.ஜ.க. ஆட்சித் தான் அதிக முறைகேடுகள் நடந்துள்ளது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு விவகாரம் குறித்து தற்போது நடந்து வரும் விசாரணையை நான் ஆதரிக்கிறேன். அதே சமயத்தில் சி.பி.ஐ. நடத்தி வரும் வழக்கு விசாரணை வரம்பு 2001-ம் ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நம்புகிறேன்.

தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு விரைவில் அடங்கி விடும். அதன் பிறகே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

அப்போது உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை இந்திய மக்கள் தீர்மானிக்க முடியும்.

அரசியல் லாபத்துக்காகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் யார்-யார் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பது அப்போது தெரிய வரும்.

இவ்வாறு தொழில் அதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
http://www.maalaimalar.com/2010/12/09135830/spectrum-affair-rathan-tata-c.html
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.