ஜெத்தாவில் விருது பெற்ற இந்தியருக்கு நடந்த பாராட்டு விழால் ரபியா! புகைப்படங்கள்
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான பிரவாஸி பாரதீய சம்மன் விருது பெற்ற டாக்டர் எம்.எஸ். கரீமுதீனுக்கு 10.01.2011 திங்கட்கிழமை பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
புதுதில்லியில் 09.01.2011 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்க்கான நிகழ்வில் பிரதமரால் இவ்விருது வழங்கப்பட்டது.
டாக்டர் எம்.எஸ். கரீமுதீன் இந்திய – சவுதி மருத்துவப் பேரவையினைத் துவங்கி சவுதி மற்றும் இந்தியாவுக்கு இடையே நெருங்கிய உறவு முறை ஏற்பட முக்கியப் பங்கு வகித்தவர்.
சவுதியில் செயல்பட்டு வரும் சர்வதேச இந்தியப் பள்ளியின் நிர்வாகக் குழுவில் 14 வருடங்களாக செயல்பட்டு அதன் தலைவராகவும் பதவி வகித்தவர். தற்பொழுது இந்திய உயர்கல்வியின் மூன்று அங்க குழுவில் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர் தற்பொழுது வெளிநாடு வாழ் இந்தியர்க்காக தமிழக அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள டிரஸ்டின் நிறுவன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர்.
நிகழ்ச்சியில் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபீக்(ரபியா) அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள்:
தகவல்: முதுவை ஹிதாயத்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்