Breaking News
recent

அதிரையில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு

  • அதிரையில் கடந்த சில நாட்களாக மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்கள் நமதூர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். நேற்று மாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கின.   
  • அதில் தலைமை உரை ஆற்றிய தமிழ் மாமணி அல்ஹாஜ் புலவர் அஹ்மத் பஷீர் அவர்கள் நமதூரின் முன்னோர்களின் கல்வி அறிவும் அவர்களின் வாழ்கை வரலாற்றையும் நம் கண் முன் நிறுத்தினார்.  
  • அடுத்து  இமாம் ஷாபியின் முதல்வர் பரகத் சார் அவர்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்கள். அவர்கள் கல்வியின் அவசியத்தையும் மாணவர்களின் அலட்சிய போக்கையும் விரிவாக விளக்கினார்கள். பெண் கல்வியின் அவசியத்தையும் கூறினார்கள். அதன் பிறகு மக்ரிப் தொழுகைக்கு பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது. 
  • அதன் பிறகு பேராசிரியர் அன்வர் அவர்கள் மாணவர்கள் எத்தகைய   சவால்களையும் எதிர்த்து சமுதாயத்திற்கு பயனுள்ள கல்வியாளர்களாக உருவாக வேண்டும் என கூறினார்.
  • அதன் பிறகு சுவாமி மலையிலிருந்து வந்த சகோதரி உமர்கனி   அவர்கள் தனக்கு உடல் குறை இருந்தாலும் சாதிக்க முடியும் என்ற கொள்கையுடன் தந்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.பெண்களுக்கும் கல்வி அவசியம் என தனது உரில் கூறினார். 
  • அதன் பிறகு எழுச்சி உரை ஆற்ற வந்த சகோரர் சி.எம்.என்.சலீம்   150 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்களின் நிலையும் இப்போதொதுள்ள நிலையையும் விரிவாக விளக்கினார்.மாணவர்களுக்கு வழங்க படும் உணவு முறைகளில் மாற்றம் தேவை என பெற்றோர்களிடம் கேட்டுகொண்டார். அதிரை கல்வி நிறுவங்களில் இஸ்லாமிய முறையில் கல்வி கற்பித்தல் பணி நடைபெறு வதில்லை என வருந்தினார். விரைவில் நமதூரில் இஸ்லாமிய அடிப்படையுடன் கல்வி வழங்க வேண்டும் என நமதூர் கல்வி நிறுவனங்களை வலியுறித்தினார். நமதூரில் பெண்களுக்கு காலையில் உலக கல்வியும் மாலையில் மார்க்க கல்வியுடன் கூடிய கல்லூரி தொடங்க பட வேண்டும் என கேட்டுகொண்டார். இறுதியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்களை வழங்கினார்.       

இறுதியில்  தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன
  • விரைவில் அதிரை இஸ்லாமிக் மிசன் மூலம் மாணவர்களுக்கான இயக்கம்.
  • பொது தேர்வுகளில் தவறிய மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி. 
  • ஊருக்கு வெளியே உள்ள நூலகத்தை ஊருக்குள் அமைக்க வேண்டும் 
  •  மாநாட்டில் கொடுத்த விண்ணப்பதை பூர்த்தி செய்து தந்தவர்களின் பட்டியலை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய படும்.  
  • இந்த விழிப்புணர்வு மாநாடு போல் தொடர்ந்து விழிப்புணர்வு செய்ய படும்.          
muslimmalar

muslimmalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.