ஜனவரி 14, 15 தேதிகளில் நமதூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது.
சமுதாயத்தை தலை நிமிரச்செய்யும் இந்த மாநாட்டை பாரெங்கும் பிரபலப்படுத்தும் வேலையை அதிரை சகோதர்கள் தங்களது வலைப்பூக்கள்,மின்மடல்,அலைப்பேசி குறுச்செய்திகள் என்று பரப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் துஆவும் வாழ்த்தும் சொல்லி வருகிறார்கள்.
அந்த வகையில் நமது முயற்சியாக முகநூலில் மாநாட்டு அழைப்பிதழை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு அனுப்பியிருந்தோம்.
மாநாடு வெற்றி பெற பல சகோதர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படி வாழ்த்தியவர்களில் முக்கியமானவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். இவர் முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர்.
நமது மாநாட்டு செய்தி 'விண்'னை தொட்டுவிட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
பல்வேறு அலுவல்களுக்கு மத்தியில் நமது அழைப்பிதழை ஏற்று வாழ்த்து சொன்ன சின்ன அப்துல் கலாம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு எங்களின் நன்றி!
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் மின்னஞ்சல் முகவரி
mylannadurai@yahoo.com
நமக்கு வாழ்த்து சொன்னவருக்கு நாம் நன்றி சொல்வோமே!
AdiraiPost
அதிரை
கல்வி விழிப்புணர்வு மாநாடு
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வாழ்த்து!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நம் கல்வி மானாட்டைபற்றி விஞ்ஞானி மயில் சாமி அவர்கள் இதற்கு வாழ்த்து அனுப்பியதைப்பற்றி படித்ததும் என் மனதில் தோன்றிய எண்ணஓட்டம் இப்படி எழுந்தது.
பதிலளிநீக்கு(கவிதை?????)
நம் மண்ணில் இன்று
கல்வியின் விழா எடுக்க உள்ளோம்.
(win)விண்னைப்பற்றி படித்த
அந்த பெருமகன்
நம் விழாவைப்பற்றி பெருமையாக பாராட்டினார்.
இது நம் மண்ணுக்கும்
ஒருநாள் வின்னில் வாய்ப்பு வரும் என்பதை காட்டுவதாக படுகிறது.
ராக்கெட் விட கவுன் டவுன் சொல்வது உண்டு.
நாம் முன்னேற கவுன் அப் ஆரம்பித்து விட்டது.
இனி வானமே எல்லை
well done ADIRAIPOST.
பதிலளிநீக்குwhat a work!!!! wonderful Adirai post. very well done.
பதிலளிநீக்குஅருமையான பணி !
பதிலளிநீக்குதம்பி தொடரட்டும் உன் தன்னலமற்ற தொண்டு, என்றும் உன்னுடன் கைகோர்ப்போம் இன்ஷா அல்லாஹ் !
புல்லரிக்கிறது.உங்கள் சமுதாய ஆர்வத்தை கண்டு ..அல்லாஹ் என்னை ஒரு சிறந்த குருப்பில்தான் சேர்த்து இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ்....காக்கா சொன்னது போல் கை கோர்ப்போம் உங்களுடன் என்றும்
பதிலளிநீக்குவின்னை முட்டும் இம்மாநாடு வெற்றிக்காக படைத்த ஏகனிடம் இரு கரம்மேந்துவோமாக ....
பதிலளிநீக்குI do not know how to express my joy towards the development of the forthcoming event in adirai..to all our brother you are doing great things to community & our town
பதிலளிநீக்கு