தற்போது அதிரை ஆஸ்பத்திரி ரோட்டில் இயங்கி வருகிறது சார் பதிவாளர் அலுவலகம்.இது ஊரின் மையப் பகுதியில் உள்ளதால் பொதுமக்களுக்கு குறிப்பாக வயதானோர் மற்றும் பெண்களுக்கு மிக வசதியாக இருந்தது.நம் ஊரைப் பொறுத்தவரை காலங் காலமாக ரியல் எஸ்டேட் தொழில்வளமாக நடைபெற்று வரும் ஊராகும்.இதனால் அடிக்கடி நம் மக்கள் போய் வர வசதியாக இருந்தது என்றால் மிகை அல்ல.
ஆனால் தற்போது வேறு இடம் மாறப் போவதாகவும்,நம் ஊரின் எந்தப் பகுதியிலும் சார் பதிவு அலுவலகம் அமைய இடம் கிடைக்கவில்லை என்றும் அதனால் அதிராம்பட்டினம் சார்பதிவு அலுவலகம் தாமரங்கோட்டை நோக்கி இடம் மாறப் போவதாகவும் செய்தி வந்துள்ளது.
இது உண்மை எனும் பட்சத்தில்,ஒரு வில்லங்க சர்டிபிகடே என்றாலும் பதிவு என்றாலும் நாம் தாமரங்கோட்டை செல்ல வேண்டி வரும்.இதனால் பெரியவர்களுக்கும்,பெண்களுக்கும் மிக கஷ்டமானதாக் இருக்கும் என்பதோடு நம் பெண்களுக்கு கண்ணியக் குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது .
அத்துடன்,நேர விரையம்,பயண செலவு (ஆட்டோ)அலைக்கழிப்பு என்பது வேறு இருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு - நம் ஊரில் இடம் வைத்துள்ளவர்கள் சார் பதிவு அலுவலக் கட்டிடம் அமைய வாடகைக்கு கொடுத்து உதவலாமே?இதன் மூலம் வருமானம் கிடைப்பதோடு நம் மக்களுக்கும் பேருதவி செய்தது போன்று ஆகும் அல்லவா?
இதற்கு,நம் ஊரில் உள்ள இயக்கங்கள்(TMMK,TNTJ,SDPI,MUSLIM LEAGUE ETC...),சங்கங்கள்(SHAMSUL ISLAM,WEST STREET,BEACH STREET JAMAATH ETC...)சட்டாம்பிள்ளையாகவும்,பத்திர வரைவுகளில் சாதனை படைத்து வரும் வக்கீல் முனீப்,இஞ்சீனியர் சாகுல் போன்றவர்கள் ஒன்று கூடி ஆவன செய்யலாம் அல்லவா?
எத்தனை ஆயிரம் கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருப்பினும்,அல்லாஹ்வுக்குக்காக இதற்கு நாம் ஒத்துழைப்போமே
அஸ்ஸலாமு அழைக்கும் .
பதிலளிநீக்குநான் நமதூர் மார்கெட் அருகே எனது நண்பருக்காக ஒரு பெரிய பில்டிங் கட்டினேன்
அது கட்டிக்கொண்டு இருக்கும்போது சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகி
நீங்கள் எங்கள் பில்டிங்கில் வாடகைக்கு வரும் படியும் மேலும் உங்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் வேண்டுமோ அதன் படி பில்டிங் அமைத்து தருவதாக கூறினேன்
அதற்கு அவர்கள் சொன்னார்கள் பெண்கள் அங்கு வந்து செல்வது சிரமம் நாங்கள் பைத்துல் மால் பில்டிங்கில் வாடகைக்கு செல்கின்றோம் என்று சொன்னார்கள்,
தாமரங் கோட்டையில் பைத்துல் மால் பில்டிங்கில் எங்கு உள்ளது என்பது தான் புரியவில்லை!!
நான் வசிக்கும் பரங்கிப்பேட்டையிலும் இதே பிரச்சினை ஏற்பட்டது, நமதூர் அனைத்து சமய மக்களும் இனைந்து இந்த பிரச்சினையில் இறையருளால் வெற்றிக்கண்டார்கள்.
பதிலளிநீக்குஅனைவரும் சேர்ந்துமுயற்சி செய்யுங்கள் அல்லாஹ் வெற்றியை தந்தருள்வான்.