Breaking News
recent

கடலூர் மாவட்டத்தில் ஒரு அராஜக ஜமாஅத்? சமுதாயத்தின் அவசர பார்வைக்கு...

கடலூர் மாவட்டம் டி. நெடுஞ்சேரி என்கிற ஊரில் மெயின்ரோட்டில் வசித்து வரும் அப்துல் சலாம் அவர்களின் மகன் ஏ.முஹிப்புல்லாஹ்,இவருக்கும் அருகில் இருக்கும் லால்பேட்டையை சேர்ந்த முஹம்மது ஜெக்கரியா மகள் ராபியத் பீவிக்கும் கடந்த 2002ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

சில ஆண்டுகளில் முஹிப்புல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது முஹிப்புல்லா குடும்பத்தினர் மருத்துவ செலவுகள் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டதுடன் அவரது மனைவி ராபியத் வீட்டினரை செய்ய வைத்தனர்.இவ்வளவிற்கும் முஹிப்புல்லாவின் இரண்டு சகோதர்கள் அரபு நாட்டில். அவரது தந்தையோ சிங்ப்பூர் வாசி!

முஹிப்புல்லாவின் மனைவி குடும்பமோ மருத்துவ செலவு செய்யும் அளவு வசதி இல்லை.கனவரின் மருத்துவ செலவு செய்ய தையல் தொழில் செய்து மிக சிரமத்துடன் மருத்துவம் பார்த்தனர் என்பது ஊரறிந்த உண்மை.

இந்நிலையில் 2009ம் ஆண்டு ஜனவரியில் முஹிப்புல்லா மரணமடைந்தார்.
கனவரின் மறைவிற்க்குப்பின் ராபியத் தனது தாய் வீட்டில் இருந்துவருகிறார். மறைந்த முஹிப்புல்லாவின் வீடு அவருக்குபின் அவரது மனைவி ராபியதுக்குதான் சேர்ந்திருக்கவேண்டும். ஆனால், அந்த‌ வீட்டை முஹிப்புல்லாவின் சகோதரி ஒருவர் அபரித்துள்ள செய்தியை அறிந்து லால்பேட்டை ஜமாஅத்தின் பரிந்துரை கடிததுடன் பத்து முறைக்கு மேல் டி. நெடுஞ்சேரி ஜமாஅத்தை அணுகியுள்ளார் ராபியத்.

ஆனால்,டி. நெடுஞ்சேரி ஜமாஅதாரோ தொடர்ந்து ராபியத்தின் நியாயமான கோரிக்கையை உதாசிப்படுத்தியதுடன் கட்டப்பஞ்சாயத்துதனமாக நடந்துவருகின்றனர்.

சமூதாய பிரச்சினைகளை ஜமாஅத்தில் பேசி தீர்க்கவேண்டும் என்று விரும்பிய ராபியதிற்கு நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் டி. நெடுஞ்சேரி காவல் நிலையம் சென்று வழக்கும் பதிவு செய்துள்ளார்.

நீதியை குழித்தோண்டி புதைத்து சமுதாய குடும்பங்களை நீதிமன்றம் செல்லதூண்டும் டி. நெடுஞ்சேரி ஜமாஅத்தின் ஆராஜகத்தை தட்டிக்கேட்க நியாவான்கள் தயாராகவேண்டும்.

லால்பேட்டை முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர்.ஜமாஅத் முறை பலமாக ஊரும்கூட. முஸ்லிம் லிக் தொடங்கி சமுதாயத்தில் எல்லா இயக்கங்களும் கட்சிகளும் இங்கு உண்டு.ஆனாலும், அந்த ஊர் பெண்ணிற்கு நீதி மறுக்கப்படுவதை ஏன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்? இதுப்போன்ற அநீதிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சமுதாயம் துணைப்போவது நமது பெண்களுக்கு ஜாமாத்தின் மீதான நம்பிக்கை இழக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிவைக்கிறோம்.
தகவல்:லால்பேட்டை அதிரை போஸ்ட வாசகர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.