Breaking News
recent

சமுதாய தொலைக்காட்ச்சிக்கு தடை

சன் குழுமத்தின் அராஜாகம் !!!
ஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முத்தாய்பாய் மூன் தொலைக்காட்ச்சி முளைத்தது !

இது ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கும் மேலாக 75% இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் 25 %ஏனைய நிகழ்சிகளையும் ஒளிப்பரப்பி வருகிறது.காலையில் சிறுவருக்கான குர் ஆன் வகுப்பு ,பயான், என ஏனைய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

ஆமாம் சகோதர்களே.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய செல்வந்தர்கள் சிலரின் சீரிய முயற்ச்சியினால் சென்னை நுங்கம்பாகத்தை தலைமையிடமாக கொண்டு தனது துல்லிய ஒளிப்பரப்பை வழங்கி வருகிறது .

இது தற்பொழுது ஒரு சில இஸ்லாமியர்கள் பெரும்பாலாக வசிக்கும் பகுதிகளில் நேயர்களின் நீண்டகால கோரிகைக்குபின் கேபிள் ஆபரேட்டர்கள் மேற்கண்ட சமூதாய தொலைக்கட்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறார்கள் .

ஆனால்
சென்னையை பொருத்தமட்டில் கேபிள் / DTH ஒளிப்பரப்பை தன்வசப்படுத்துகொண்ட சன் குழுமம் நமது மூன் தொலைக்காட்ச்சி ஒளிப்பரப்பிற்கு தடையாக உள்ளது .

இந்த தொலைகாட்சி நிர்வாகிகள்" டன் டனா டன்னிடம்" விளக்கம் கேட்டால் இந்த தொலைக்காட்ச்சி ஒளிப்பரப்பை கேபிளில் செய்ய கட்டனாமாக7 கோடி வரையிலும் பேரம் பேசி கலட்டிவிடுவதிலேயே முனைப்பு காட்டிவருகிறது சன் குழுமம் .

இன்றைய மீடியாக்கள் தொல்லை காட்ச்சிகளாகவே வழங்கி வரும் மற்ற சேன்னல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் இது போன்ற தொலைகாட்ச்சிகளின் ஒலிப்பரப்பிற்கு சமுதாய அமைப்புகள் குரல் கொடுத்திட முன் வரவேண்டும் .
Adirai Media

Adirai Media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.