Breaking News
recent

ஒரு பேட்டி...

ஒரு பேட்டி...

ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T அவர்கள்..


இப்போது இணைய தளத்தில் அதிகம் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிராம்பட்டினத்தை சார்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இருப்பினும் இவர்களின் கல்விக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்புடன் செயலாற்றிய பல ஆசிரியர்கள் இப்போது ஒய்வு பெற்று விட்டார்கள்.

அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என நினைவு வந்தவுடன் எனக்கு கிடைத்த டெலிபோன் நம்பரில் தொடர்பில் கிடைத்த ஆசிரியர் SKM H என்று நான் படிக்கும் காலங்களில் அன்புடன் அழைக்கப்பட்ட ஹாஜா முஹைதீன் சார். நானும் அவரின் பழைய மாணவன் ஆதலால் சில நல விசாரிப்புகளுக்கு பிறகு...

உங்கள் மாணவப்பருவம், பள்ளியில் சேர்ந்து பணியாற்றியது பற்றி...

பள்ளிப்பருவம் எல்லாம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளிதான் [ அப்போது உயர்நிலை மட்டும் தான்] பிறகு பி.யு. சி எல்லாம் Kadhir Mohideen college , 3 வருடம் ஆசிரியராக பணியாற்றிய பிறகு புதுக்கோட்டை அரசினர் ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் B.T படிப்பு முடித்து, 8- 9 வருடம் ஹையர் செக்க ஆசிரியர் ஆகி 1986ல் தலைமை ஆசிரியர் பொறுப்பு ...பிறகு 31- 05- 1998 ல் ஓய்வு பெற்றேன்...

ஒரு மிகப்பெரிய பணியை இவ்வளவு சிம்பிளாக சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது..இடைப்பட்ட காலங்களில் எத்தனை நிகழ்வுகள் எத்தனை ஏமாற்றம் , எத்தனை வெற்றி எதையும் ஒரே மாதிரி பார்க்கும் மனப்பக்குவம் சாரின் வார்த்தைகளில் தெரிந்தது.

இப்போது உங்களது வேலை பற்றி...

1998 செப்டம்பரிலிருந்து IMAM SHAFI METRIC HIGHER SECONDARY SCHOOL, ஏறக்குறைய 70 Teachers, 30 பேர் கொண்டNon Teaching Satff, உதவியுடன் 1600 மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது.

மறக்கமுடியாத நிகழ்வுகள், மாணவர்கள் பற்றி...

நிறைய இருக்கிறது,நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். மாணவர்கள் பெயர் எல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை..என் வயதும் அதற்க்கு ஒரு காரணமாக இருக்களாம். நாடகம் விளையாட்டு என்று எனக்கு ஆர்வம் இருந்ததால் சில மாணவர்கள் எனக்கு ஞாபகம் இப்போதைக்கு வருகிறது.நாடகங்களில் பங்கேற்ற ஜாபர், அஸ்ரப், சிராஜுதின், நூர்முஹம்மது, விளையாட்டில் சிறப்பாக இருந்த அல் அமீன். உன் பெயரில் இன்னொரு மாணவன் இருந்தான் [ அவனும் ஜாஹிர் ஹுசேன் தான்.. உனக்கு ஜூனியராக இருக்க வேண்டும்.]

நினைவில் நிற்க்கும் நிகழ்வுகளில் என் ஆசிரியர் பணியையே சொல்லலாம்...நான் படித்தது நாடிமுத்து சார், ரெங்கராஜ் சார், நாகரத்தினம் சார்..இந்த மூவரிடமும். பின் அவர்களோடு சேர்ந்து ஒன்றாக பணியாற்றியது, பிறகு நான் தலைமை ஆசிரியர் ஆகும்போது அவர்களும் என்னுடன் பணியாற்றியது. இது இன்னால் வரை எனக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

இன்னும் ஒன்று ஒருமுறை பக்கத்து ஊரில் தேர்தல் தலமை அதிகாரியாக போயிருக்கும்போது [அசம்ப்ளி எலக்சன்] ஒரு P.E.T ஆசிரியர் என்னைவிட மூத்தவர் [ வேலை/வயது இரண்டிலும்] என்னைப்பார்த்து சொன்னது எப்படி சார் நீங்கள் ஒரு P.E.T , ஆனால் என்னை விட வயதிலும் , சர்வீசிலும் குறைந்தவர் எப்படி எனக்கு தேர்தல் அதிகாரியாக அரசு நியமித்து இருக்கிறது.??

உடனே நான் சொன்னேன் ' சார் முதலில் ஒரு உண்மை..நான் P.E.T அல்ல , கிராஜுவேட் முடித்து , தலைமை ஆசிரியாக இருப்பதுடன் ஒரு Mathematics Teacher. நான் விளையாட்டின் மீதான ஆர்வத்தில் மாணவர்களுடன் District/ Divisional Sports போவதை பார்த்து என்னை P.E.T ஆக நினைத்து விட்டார்.’

இல்லை சார் இன்றும் ஸ்லிம் ஆக இருக்கும் உங்கள் உடல்வாகு பார்த்து அவர் முடிவு செய்து இருக்களாம்..- இது நான்

ஒரு முறை District Education Officer ஆக இருந்த ஒருவருடன் இலக்கிய மேடையில் பேசிய பிறகு, அடுத்த நாள்அவர் நமது ஸ்கூலுக்கு வந்த போது நான் கணக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் போது 'நீங்கள் ஏன் கணக்கு பாடம் எடுக்கிறீர்கள்?...போய் கணக்கு ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றவுடன்..சார் நான் கணக்கு ஆசிரியர்தான் என விளக்கம் சொல்லவேண்டியிருந்தது.

முன்னால் / இந்நாள் மாணவர்கள் ஒரு ஒப்பீடு……..

' அப்போது இருந்த மாணவர்களிடம் இருந்த obedience இப்போது பார்ப்பது அறிதாகிவிட்டது.. அதற்க்கு காரணம் சூழ்நிலைகள், சட்டம் எல்லாம்தான். மாணவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும் என்று இல்லை நாம் அவனிடம் அன்பாக ஒரு 10 நிமிடம் பேசினாலும் அவனது தவற்றை உணர வைத்து விடலாம். முன்பு ஒரு ஆசிரியரிடம் கோபமாக நடந்த மாணவனை எனது அன்பால் திருத்திய 2 நிகழ்வுகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

தமிழ் , இலக்கியம் மற்றும் நாடகம் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

' உண்மையிலேயே நான் தமிழ் இலக்கியம் படிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு அப்ளிகேசன் போட்டு இடம் எல்லாம் கிடைத்து விட்டது , அப்போது டாக்டர் மு.வரதராசன், பேராசிரியர் அன்பழகன் எல்லோரும் அங்கு பேராசிரியராக பணீயாற்றிய காலம்...அப்போது உள்ள குடும்ப பொருளாதார சூழ்நிலையில் நான் மெட்ராஸ் போய் படிக்க முடியவில்லை.

நான் ஆசிரியர் பணியில் இருக்கும் போது பள்ளி மாணவர்களை, அகில இந்திய வானொளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்தேன் அதில் நான் எழுதி மிகப் பிரபலமான இரண்டு நாடகங்கள் மாவிரன் அலெக்சாண்டர், மாவீரன் திப்பு சுல்தான், அறிவியல் நிகழ்ச்சிகள் ஆறு முறையும் மற்றும் வினாடிவினா நிகழ்ச்சி மூன்று முறையும் எழுதி இயக்கியிருக்கிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி..

2 மகன்கள், 1 மகள் எல்லோருக்கும் கல்யாணமாகிவிட்டது... நானும் 2002 ல் குடும்பத்துடன் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீ எப்படிப்பா இருக்கே..உனக்கு எத்தனை பிள்ளைங்க...உன் வாப்பா சவுக்கியாமா..என் சலாத்தை அவர்களுக்கு சொல்லிவிடு...

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் சாரின் அன்பான விசாரிப்பில் நான் நெகிழ்ந்துதான் போனேன்.

ZAKIR HUSSAIN

நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்
Zakir Hussain

Zakir Hussain

2 கருத்துகள்:

  1. மதிப்பிற்குறிய சார் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ துஆ செய்வோம்.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

    அன்புள்ள ஜாகிர் காக்கா..!
    பதிவுலகில் நிச்சயம் இது ஒரு புரட்சி.

    தான் படித்த ஆசிரியரை நினைவு கூர்ந்து பேட்டி எடுப்பது என்பது..!

    தங்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய முதற்கண் நன்றியும் வாழ்த்துக்களும்.

    நானும் SKMH சாரின் மாணவன்தான்.

    //அலகிலா அருளும் அளவிலா அன்பும் தரும்
    நிகரிலா இறையின் இனியபேர் போற்றி.

    உலகெலாம் படைத்தே உயருரக்காக்கும்
    புலமையோன் தனக்கே புகழெலாம் உரித்து.//
    --என்றுதான் இனிமையாக சொற்பொழிவை ஆரம்பிப்பார்..!

    பள்ளியில், அப்போது ஒவ்வோர் நாளும் அசெம்ப்ளியில் ஒரு சீனியர் மாணவர் சூரா ஃபாத்திஹா ஓதுவார். அவர் வராவிட்டால் அவ்வப்போது நானும் ஓதி இருக்கிறேன்.

    அருமையான பசுமையான மகிழ்வான ஞாபகங்கள். மறக்க முடியுமா..!

    சாரின் மகன், ஷேக் ஷமீம் என்னுடைய வகுப்புத்தோழன்..!

    என்னுடைய சலாமை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.