ஸலாஹியா அரபிக் கல்லூரி 112-வது ஆண்டு விழா மற்றும் மெளலவி ஆலிம் & காரி பட்டமளிப்பு விழா 09/07/2011 சனிக்கிழமை அன்று காதர் முகைதீன் கல்லூரி வாளாகத்தில் நடைபெற உள்ளது.நிகழ்ச்சி சரியாக காலை 9:00 மணி அளவில் துவங்கும்.
மெளலானா மெளலவி அல்ஹாஜ் எல்.எம்.எஸ்.அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் தலைமையிலும், எம்.கே.என் மத்ரஸா டிரஸ்ட் செகரட்டரி ஜனாப் டாக்டர் எஸ்.முஹம்மது அஸ்ஸலம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறுகிறது.
இலங்கை குல்லியத்து ஸபீலிர் ரஷாத் பேராசிரியர் மெளலானா மெளலவி அல்ஹாஜ் எம்.ஜெ.அப்துல் காலித் ஹஜ்ரத் அவர்கள் பட்டமளிப்பு பேரூரை நிகழ்த்துகிறார்கள்.
அதிரைப்பட்டினம் ரஹ்மானிய்யா மத்ரஸா முதல்வர் மெளலானா மெளலவி கே.டி. முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்களும், அதிரைப்பட்டினம் ஸலாஹியா மத்ரஸா பேராசியர் மெளலானா மெளலவி அல்ஹாபிழ் எம்.ஜி. முஹம்மது ஸஃபியுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அதிரை தகவல் களஞ்சியம்
பதிலளிநீக்கு1.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் கடற்கரை தெரு பள்ளிவாசல் தொடங்கப்பட்டது (இந்த ஆண்டுடன் 571 ஆண்டுகள் ) .
2.அதிராம்பட்டினத்தில் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் 1638ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
3.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் சலாஹிய்யா மதரசா 1901ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
4.அதிராம்பட்டினத்தில் முதல் பெண்கள் மதரசா (உஸ்வத்துர் ரசூல் ) 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
5.அதிராம்பட்டினத்தில் ரஹ்மானியா மதரசா 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
6.அதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீபு 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
7.அதிராம்பட்டினத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கம் 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
8.அதிராம்பட்டினத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (1ஆம் நம்பர் ) 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
9.அதிராம்பட்டினத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (2ஆம் நம்பர் ) 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
10.அதிராம்பட்டினத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(நடுத் தெரு ) 1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
11.அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
12.அதிராம்பட்டினத்தில் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடம் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
13.அதிராம்பட்டினத்தில் தர்பிய்யதுல் இஸ்லாம் நர்சரி பள்ளிக்கூடம் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
14.அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் கல்லூரி 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
15.அதிராம்பட்டினத்தில் மின்சாரம் 1938 ஆம் ஆண்டு வந்தது .
16.அதிராம்பட்டினத்தில் தபால் நிலையம் 1898ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
17.அதிராம்பட்டினத்தில் ரயில் நிலையம் 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
18.அதிராம்பட்டினத்தில் அரசு மருத்துவமனை 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
19.அதிராம்பட்டினத்தில் ஷிஃபா மருத்துவமனை 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
20.அதிராம்பட்டினத்தில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
21.அதிராம்பட்டினத்தில் பேருந்து போக்குவரத்து 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
22.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் நூர்லாட்ஜ் ஹோட்டல் 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
23.அதிராம்பட்டினத்தில் முதல் முதலில் அரசு நூலகம் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.