Breaking News
recent

ஊடகவியல் யுத்தம் - இல்ஹாம் முபாரிஸ்


ஊடகங்கள்தான் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் மிகையல்ல. ஏனென்றால் ஒரு செய்திஅது பெறவேண்டிய முக்கித்துவத்தையும்அது மக்களை சென்றடைய வேண்டுமா என்பதையும் முடிவு செய்வது ஊடகங்கள்தான். உலகத்தில் பரந்திருக்கும் இதழ்கள்,தொலைக்காட்சி அலை வரிசைகள்திரைப்படம்காணொளி (Video) இணையம்வானொலி,தனிநபர் பிரச்சாரம் என மக்க ளைச் சென்றடையும் செய்திகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் தகவல் தொலைத்தொடர்புக் கருவிகள் ஆகிய அனைத்தையும் ஊடகம் என்ற கருத்தாக்கத்தில் சேர்க்கலாம்.
இவ்வாறு பல்வேறு வகைகள் இருந்தபோதிலும் காட்சி ஊடகங்களே (Visual video) மக்கள் மனதில் பெரிதும் பாதிப்பேற்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன. அதாவது ஒரு செய்தி எழுத்து வடிவில் மக்களை சென்ற டைவதை விட காட்சி ஊடகமான தொலைக்காட்சி அலை வரிசைகள்,திரைப்படங்கள்குறுங்படங்கள்ஆவணப்படங் கள் (Documentry films) போன்றவற்றின் மூலமாக விரைவாக சென்றடைகின்றன.
செய்தியாளர் என்பவர் எந்தப்பக்கச் சார்புமில்லாமல் தன் மதம்பிரதேசம்மொழிஇனம் என எந்தப்பாதிப்புமின்றி செய்தியைத் தெளிவாகஉள்ளது உள்ள படி மக்களிடம் கொண்டு சேர்ப்பவர் எனக் கூறப்படுகின்றது.
அல்குர்ஆனும், "நம்பிக்கையாளர்களேஒரு தீயவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை ஏற்றுக் கொள்ள முன்னர் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உண்மையை அறியாமல் ஒரு குற்றமற்ற சமூகத்திற்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக்கூடும். பின்னர் உண்மை தெரியவரும்போது நீங்கள் செய்ததை எண்ணி உங் களை நீங்களே நொந்துகொள்ள வேண்டியிருக்கும்" (49:06) என்று கூறுகிறது.
மேலும் அமெரிக்காவிலுள்ள Society of Professional Journalist ன் கூற்றுப்படி ஒரு செய்தி 5W’sகொண்டதாக இருக்க வேண்டும். (Who, What, When, Where, Why) இவ்வாறு தான் செய்தியாளர்களும் செய்திகளும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனாலும்இன்றைய சமகால உலகில் ஊடகவியல் யுத்தம் பரவலாக நடந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இன்று உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்,திவீரவாதத்திற்கு எதிரான யுத்தம்அடிப்படைவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயர்களில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் யுத்தங்கள் வெறுமனே இராணுவ ரீதியான படையெடுப்புக்கள் அல்ல. உண்மையில் சகல யுத்தங்களும் பெரும்பாலும் ஊடகங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகத்துறை குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் கூறிய கருத்து பின்வருமாறு அமைகிறது. "யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள் 19ம் நூற் றாண்டின் சக்தியாக விளங்கினார்கள். யாரிடம் விமானப்படை இருந்ததோ அவர்கள்தான் 20ம் நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்ந்தார்கள். எவர் வசம் ஊடகம் இருக்கிறதோ அவர்கள்தான் 21ம் நூற்றாண்டின் சக்தியாக விளங்குவர்" என்றார்.
அவ்வாறே சமூகவியல் அறிஞர் கோவிந்தரநாத் வெளியிட்டுள்ள கருத்து பின்வருமாறு அமைகிறது. "ஊடகத் துறையினரே இன்றைய உலகின் ஜாம்பவான்கள். அவர்கள்தான் இந்த உலகில் கருத் துருவாக்கத்தை தீர்மானிப்பவர்கள்."
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களுடனான அல்ஹஸனாத்தின் நேர்காணலில் அவர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார். "ஊடகம் என்பது ஒரு பக்கம் அருளாக இருப்பது போல மறுபக்கம் சாபக்கேடாகவும் இருக்கிறது. ஊடகத்தை ஒரு கத்திக்கு உவமிக்கலாம். கத்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம். அழிவிற்கும் பயன்படுத்தலாம்.
ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணரிடம் ஒரு கத்தி இருந்தால் அதனைக் கொண்டு அவர் ஒரு உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பார். அதே கத்தி ஒரு கொலைகாரனின் கையில் இருந்தால் அதனைக் கொண்டு அவன் ஒரு உயிரையே பறித்துவிடுவான். இன்று ஊடகத்தை தம்வசம் வைத் திருப்பவர்கள் அறுவைச்சிகிச்சை பணியைச்செய்கிறார்களாகொலைகாரர்களின் வேலையைச் செய்கிறார்களாஎன்பது சிந்திக் கத்தக்கது."
இன்றைய ஊடகங்களில் எத்தகைய தார்மீக ஒழுக்கமும் பேணப்படுவதாய் தெரியவில்லை. சமூகசார் எண்ணம்பக்கச் சார்புதிரிபுகள்மிகைப்படுத்தல்குறை மதிப்பீடு செய்தல்பொய்உறு திப்படுத்தப்படாத செய்திகள்ஊகங்கள்காம உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தகவல்கள்,படங்கள் முதலானவை இன்றைய ஊடகங்களில் மலிந்து கிடக்கின்றன. மேலும் இன்றைய உலகளாவிய ஊடகமானது இஸ்லாத்திற்கு எதிரானமுஸ்லிம்களுக்கெதிரான முனைப்போடு செயற்பட்டு வருகின்றது.
இஸ்லாமோ ஃபோபியா எனும் இஸ்லாம் பற்றிய அச்சம் உலகளாவிய ரீதியில் பல மட்டங்களிலும் விதைக்கப்படுவதற்கு இந்த ஊடகம்தான் உச்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனைய மதங்களில்ஒருவன் தவறு செய்தால் அதை அவனளவிலும்முஸ்லிம் ஒருவன் தவறு செய்துவிட்டால் அதனை இஸ்லாத்தோடு இணைத்தும் செய்தி களை வெளியிடுவது முஸ்லிம் களுக்கெதிரான ஊடகங்களுக்கு கைவந்த கலையாகக்காணப்படுகிறது.
முஸ்லிம்கள் என்றால் வன்முறைகளைத் தூண்டுபவர்கள்தீவிரவாதிகள் என்று மற்றவர்கள் கூறும் மனோநிலைக்கு ஊடகங்கள் மக்களை மாற்றியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக செப்டம் பர்11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைக் குறிப்பிடலாம். இத்தாக்குதலில் ஒரேநாளில் 3000 யிற்கும் அதிகமானோர் பலியான செய்தி உலகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரவி இன்றளவும் படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதற்கு இந்த ஊடகங்களே காரணமாகும். ஆனால்ஆபிரிக்காவில் தினந்தோறும் கொல்லை நோய் மூலம் 3000 பேர் கொல்லப்படும் தகவல் அதே செய்தி நிறுவனங்களால் வெளியிடப்படுவதில்லை.
முஸ்லிம்கள் ஒவ்வொரு நவீன கண்டுபிடிப்புக்கள் வந்த போதெல்லாம் அதைத் தீய வழியில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அதனை ஏற்றுக் கொள்ளாமல் முற்றிலும் மறுத்து வந்தனர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச்சிக்கும் மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று தாமத மாக அறிந்து கொண்டதன் பின்னர்தான் Audio, Video, CD, DVD எனப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டாமைபுதிய கண்டுபிடிப்புகளை ஏற்க மறுத்தமை,அல்குர்ஆன்-ஹதீஸ்களை தெளிவுபடுத்த மறுத்தமைமார்க்கப்பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் பாதியையேனும் சமுதாய வளர்ச்சிக்குக் கொடுக்காமை போன்ற காரணங்களை முஸ்லிம்கள் ஊடகத்துறையில் பின்தங்கிப் போனதற்கான காரணிகளாக அடையாளப்படுத்தலாம்.
ஆகவேஊடகங்களை எதிர் கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். Video Conference யின் மூலம் ˆOnline இல் கல்வி கற்கும் நிலை நிலவிவருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்களுக்கென்று இத்தகைய கல்வி நிலையங்கள் எத்தனை இருக்கின்றன. வெறுமனே மத்ரஸாக்களை மட்டும் தெருவுக்குத் தெரு உருவாக்கி வருகின்ற நிலை முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது.
இந்த நிலைமாற வேண்டும். கல்வியை மார்க்கக்கல்விஉலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண்டும் இணைந்ததாகக் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். கல்வியில் பின்தங்கியதன் காரணமாக ஊடகத்தில் மட்டுமல்லாது அரச வேலைவாய்ப்புஅரசியல் போன்றவற்றிலும் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டோம். ஆகவேபணம் படைத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் அதற்கான வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஏற்படுத்த முன்வர வேண்டும். கற்றறிந்தவர்களும் இதற்காகப் பாடுபட வேண்டும்.
இணையத்தின் பயன்பாடுகளைக் கொண்டு முஸ்லிம்கள் ஊடகங்களை வலுவடையச் செய்யலாம். இணையம் என்பது உலகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இணைத்துவிடுகின்றது. மேலும் இஸ்லாத்தை எத்தி வைப்பதோடு அல்லாமல் முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள்சமுதாய வளர்ச்சிசேவை போன்ற நல்ல நோக்கங்களுக்கும் இத்த கைய ஊடகங்களைப்பயன்படுத்த வேண்டும்.
இஸ்லாத்தின் வரையறைக்குள் இருந்துகொண்டு இத்தகைய ஊடகங்களை எப்படிப்பயன்படுத்தலாம் என்பதை சிந்தித்து பயன்படுத்த முன்வர வேண்டும். ஒரு அல்ஜஸீராவும்,அல்அரபிய்யாவும்Peace TV தொலைக்காட்சியில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அறிவோம்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.