Breaking News
recent

பத்ர் - Battle of badr


இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர் போராகும். இந்த போர் இஸ்லாமிய வரலாற்றில் முதல்போராகும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த போர் . இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடைபெற்றுள்ளது.
உண்மையில் இந்த களத்தில் கொள்கைக்காக இரத்த உறவுகள் தமக்குள் மோதிகொண்டது. தந்தையும் மகனும் மோதிக்கொண்டனர், சகோதரர்கள் மோதிக்கொண்டனர், நண்பர்கள் மோதிக்கொண்டனர் இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர்.
இரத்த உறவுமுறையை விடவும் அதிக பலம் வாய்ந்தது இஸ்லாமிய கொள்கை என்பதை முஸ்லிம்கள் களத்தில் நீரூபித்தனர் இந்த கொள்கை உணர்வினகாரனமாக அதிக எண்ணிக்கை கொண்ட பலமான படையை ஒரு சிறிய படை எதிர்கொண்டது வெற்றிபெற்றது.

Unknown

Unknown

4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இஸ்லாத்தின் புனித மாதத்தில் பத்ர் பற்றிய இந்த பதிவில், குர் ஆன் ஹதீஸுக்கு மாற்றமான புறம்பான இந்த சினிமா காணொளி தேவையா?

    அதிரை போஸ்ட் மட்டுருத்துனரே, தயவு செய்து இந்த சர்ச்சையான காணொளியை நீக்குமாறு வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.

    நபிகளார் மற்றும் அவர்களின் தோழர்களை கற்பனை தோற்றத்தில் கேவலைப்படுத்தியுள்ள இந்த காணொளி வெளியிட்டமைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    அல்லாஹ் போதுமானவன்...

    பதிலளிநீக்கு
  2. வலைக்கும்முஸ்ஸலாம்(வரஹ்) காக்கா, இந்த சினிமா- காணொளியை நீக்குகிறேன்.

    A Film On The Life Of Holy Prophet Mohammed(P.B.U.H) Movie: The Message(In English) http://www.youtube.com/watch?v=AP8jTCpDvBQ என்ற படத்தின் ஒரு பகுதியாகும். இந்த சினிமா உலக முஸ்லிம் உம்மத்,இஸ்லாமிய அறிஞர்கள் இன்னும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவுடன் தடையின்றி வெளியிட்டு, ஓடிய படமாகும்.
    அந்த வகையில்தான் நாமும் வெளியிட்டோம்.

    http://en.wikipedia.org/wiki/Mohammad,_Messenger_o

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இந்த காணொளியை நீக்கியமைக்கு மிக்க நன்றி.

    இந்த சினிமாவை மார்க்க அறிஞர்கள் ஆதரிக்கவில்லை விமர்சிக்கவே செய்தார்கள், காரணம் அநேக விடையங்கள் ஹதீஸ்களுக்கு முரணான காட்சிகள் உள்ளதால்.

    எவ்வளவோ அற்புதமான மார்க்க சொற்பொழிவுகள் நமக்கு இணையத்தில் கொட்டிக்கிடக்கிறதே பத்ர் யுத்தம் பற்றி, இவைகளை விடுத்து இது போன்ற சினிமாக்களால் நாம் ஒரு தவறான முன்னூதாரணங்களை தருவதை தவிர்பது நல்லது என்ற நோக்கில் நீக்க கோரினேன். இன்று எத்தனையோ சிறந்த பிரபலமான இஸ்லாமிய இணையங்கள் உள்ளது, யாருமே இந்த காணொளியை வெளியிடவில்லையே..

    புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி.

    அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.