
ஹஜாரே.
எந்த ‘சோனியா காந்தியை’ கவிழ்க்க ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் ஊழல் எதிர்ப்பு போர்வையில் போராட திட்டமிட்டரோ, அதே சோனியா காந்திக்கு இந்த ‘குட்டை அன்னா’ எழுதியுள்ள கடிதத்தில் ” என்னை களங்கப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அவதூறு பிரசாரம் செய்கின்றனர். எனக்கு எதிரான ஆதாரங்களை பகிரங்கமாக வெளியிட்டு நிரூபிக்க வேண்டும்’ என, எழுதி தன்னை மீண்டும் தலைவனாக காட்ட முயன்றுள்ளார் அன்னா ஹசாரே.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த திடகாத்திர உடலுடன், பெண்கள் உடையில் தொண்டர்களை அடிவாங்கவிட்டு தப்பிச்சென்ற கோடிஸ்வர யோகா குரு ‘ராம்தேவ்’ ஏழே நாட்களில் மருத்துவமனைக்கு சென்று விட்டு தனது திரண்ட சொத்துக்களை அனுபவிக்க மீண்ட நிலையில், வெற்றிகரமாக வாரக்கணக்கில் உண்ணாவிரதமிருக்கும் கலையை கற்றுள்ள ‘மோடி வழி செல்லும் காந்தியவாதியான அன்னா ஹசாரே, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய மூன்று பக்க கடிததிலேயே இந்த நகைப்புக்குரிய தனது ‘ராஜதந்திரத்தை’, அம்பலப்படுத்தியுள்ளார்.
யோகா குரு ராம்தேவ் அடித்த கூத்து, பா.ஜ.க தலைவி சுஷ்மா ஸ்வராஜ் காந்தி சமாதியில் போட்ட குத்தாட்டம் போன்றவைகளால் ‘அம்பலப்பட்ட ஹசரேவான’ இவரது போராட்டத்திற்கு, போது மக்கள் ஆதரவு இழந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் அவர்ளது குடும்பத்தினரோடு கூட்டம் காட்டி தோற்ற நிலையில் தனது கடிதத்தில் தான் எப்படிப்பட்ட தலைவனாக இருக்கவேண்டும் என்ற ஆசையை கொட்டி தீர்த்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் இவரது கடிதம் பற்றி கூறி நகைக்கின்றனர்.
அவரது கடிதத்தில், தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாகவும், இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தன்னை பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., முகமூடி அணிந்த வேடதாரி என்று அவதூறு கூறுவதாகவும், ஜன் லோக்பால் விஷயத்திலும், நாட்டு மக்களை தவறாக அவர்கள் வழி நடத்துவதாகவும்’ புலம்பியுள்ளார் ‘அன்னா’.
மேலும் தனது உண்ணாவிரத மேடையில் எந்த அரசியல் கட்சித் (ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகஎன்று வாசிக்கவும்) தலைவர்களையும் மேடை ஏற, அனுமதிக்கவில்லை என்றும் கூறி ‘இது பத்தினி வீடு’ என்று நிருபித்து கட்டியுள்ளார் ‘அன்னா ஹஜாரே’, என்ற ‘போலி காந்தியவாதி’.
நன்றி: யுனிட்டி மீடியா நியூஸ்
இந்த காந்தித் தோல் போர்த்திய பூணையை பலிகடாவாக்க முடிவு செய்திட்டய்ங்க !
பதிலளிநீக்குஅவய்ங்க அரசியலுக்குண்டான வழிகள் (வெடிப்பது, ர(த்)தம் ஓட்டுவது, இடிப்பது) தற்காலிகமாக தடைபட்டிருப்பதால், ஒரு தியாகி (போர்வை) உயிர் தேவை அவரின் ஆவி அடங்கியதும் / முடிந்ததும் இந்தக் காவிகள் களமிறங்குவார்கள் ஆதாயம் களைகட்ட கலகம் ஏற்படுத்த !!
இதுதானே நடக்கும் இதிலென்ன புதுசா இவய்ங்க செய்யப் போறானுங்க !!!!???