Breaking News
recent

அதிரை துலுக்கா(தக்வா)பள்ளி சலசலப்பு.... ஆவனங்கள் கேட்டு ஒரு கடிதம்!

நமது துலுக்கா(தக்வா)பள்ளியில் ரமளான் துவங்கியது முதல் நிர்வாக கமிட்டிக்கும் முஹல்லா ஜமாஅத்திற்கும் சில விசயங்களின் கருத்து வேற்றுமை.அதை தொடர்ந்து சலசலப்பு அதன் பயனாக இரு முறை காவல்துறை வரை புகார் சென்றதாக கேள்வி!

ஒரு பக்கம் ஒற்றுமை பேசுகிறோம் மறு பக்கம் வேற்றுமையுடன் செயல் படுகிறோம்.அதிலும் இந்த புனித ரமளான் மாதத்தில். நாம் கவனித்த வரையில் ஒரு மணி நேரம் இரு தரப்பும் அமர்ந்து பேசினால் ஒற்றுமை ஏற்படும் ‘கருத்து வேறுபாடு’தான் இது.

ஆனாலும் யாரும் முன்வரவில்லை. இரு தரப்பிலும் விட்டுகொடுக்கும் மனம் இருப்பதாக தெரியவில்லை.

இந்த இரு தரப்பையும் ஒற்றுமைப் படுத்தவேண்டிய கடமையும் கடப்பாடும் அதிரை மக்கள் அனைவருக்கும் குறிப்பாக உலமாக்களுக்கு இருக்கிறது.
அவர்கள் இந்த விசயத்தை கவனத்தில் எடுத்து செய்யவேண்டும்.

மேலே சுட்டிகாட்டிய சலசலப்பை தொடர்ந்து, துலுக்கா(தக்வா)பள்ளி நிர்வாகத்திடம் குலோப்ஜான் அகமது அன்சாரி அவர்கள் சில ஆவனங்களை கேட்டிருக்கிறார்.அதன் நகல் இங்கு பதியப்படுகிறது.

இது போல் துலுக்கா(தக்வா)பள்ளி நிர்வாகமும் விளக்கம்,தகவலை நமது மின்னஞ்சலுக்கு adiraipost@gmail.com அனுப்பினால் பதிவிடுவோம். இன்ஷாஅல்லாஹ்!

(இந்த விசயம் குறித்து உங்கள் கருத்துக்களை கண்ணியமான முறையில் ஒற்றுமை ஏற்படும் வகையில் பதிவு செய்யுங்கள் .இந்த கருத்துக்களை நாம் அவர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வோம்)
Unknown

Unknown

7 கருத்துகள்:

 1. இந்த புனித மிகு ரமளானில் அல்லாஹ்வை துதிக்க பள்ளிகளுக்கு வருகிறவர்களுக்கு இந்த பள்ளியின் நிர்வாகம் ஒரு தலை பட்ச்சமாக நடந்து கொண்டு சில பெரிய மனிதர்களின் சாபத்தை சம்பாதித்து வருகிறது நல்லதல்ல இவர்களை போன்ற எத்தனைய சீர்திருத்த வாதிகளை எல்லாம் இந்த முஹல்லா வாசிகள் கண்டுவிட்டார்கள் எனவே இந்த பள்ளியை ஒரு சாரார் அபகரிக்கும் நோக்கத்தில் செயல் படுவார்களேயானால் அவர்களுக்கு நல்லதல்ல எனபதை இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் .

  பதிலளிநீக்கு
 2. எல்லாரும் உட்கார்ந்து பேச வேண்டிய செய்தி,பப்ளிஷ் பண்ண வேண்டிய செய்தி அல்ல.அனைத்து தரப்பாரும் அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. உக்காந்து பேச பல முறை முயற்சித்தும் நட்காததே இந்த பதிவுக்கு காரணம் என தோன்றுகிறது..

  பதிலளிநீக்கு
 4. அல்லாஹ்வின் பள்ளியை எந்தக் கொண்பனாலும் கைபற்ற முடியாது ! அதுவும் அதிரையில் அது சாத்தியமல்ல...

  இப்படி சத்தம் போட்டுக் கொண்டு சகோதர யுத்தம் பொதுவில் வைப்பதை தவிர்த்திருக்கலாம்.

  யார் பக்கம் தவறு என்று தீர்க்கமான விபரம் தெரியாவிடினும், அல்லாஹ்வின் பள்ளியில் நுழையவிடாமல் பள்ள்யின் வெளிக் கதவை பூட்ட எவருக்கும் அதிகாரமில்லை, அன்றைய தினம் பூட்டியவர்களும் கைகலப்பில் ஈடுபட்டவர்களும் தண்டிக்க வேண்டியவர்களே !

  பதிலளிநீக்கு
 5. இந்த தக்வா பள்ளியின் நிர்வாகத்தின் மீது ஒரு முஹல்லா வாசி வழக்கு தொடர்ந்ததின் காரணமாக வக்பு காசு மாதா மாதம் 5000 ருபாய் வீண் சிலவு ஆகிறது இது இந்த பள்ளியை நிர்வகிக்கும் மாற்று மத வக்கீல் க்கான மாத சம்பளம் இந்த பள்ளியை பொறுத்த மட்டில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த சகொதரிடம்தான் முறையிட வேண்டும் இது தேவையற்ற ஒன்றாகும் என்பதே எனது கருத்து இரு தரப்பாரும் பள்ளியின் விஷயத்தில் விளையாடினால் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

  --
  என்றும் அன்புடன்...
  A. ஹசன் ( அதிரைபுதியவன் )
  www.adiraiputhiyavan.blogspot.com

  பதிலளிநீக்கு
 6. பிரச்சனைகளுக்கு காரணம் மௌலிது தானே? ஒரு சில நூற்றாண்டுகளாக ஏற்பட்ட இந்த இறைமறுப்பும்,
  இறை நிராகரிப்பும் கலந்த அரபு பாட்டுகளை அல்லாஹ் வை மட்டுமே துதிக்க வேண்டிய இறைவனின் வீடுகளில் பக்தி பரவசத்தோடு பாடுவது எந்த வகையில் நியாயம். மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் (ஆஸ்பத்திரி) தெரு அவர்கள் வீட்டிலும் அவர்கள் இறைவனடி சேரும் காலம் காலம் வரை அரபுப்பாட்டு நடத்தப்படவில்லை. வேறு எங்கும் நடத்த அங்கீகரிக்கவும் இல்லை. அவர்களின் மகள் வீட்டுப் பேரன் அவர்களே இதை என்னிடம் சொன்னார்கள்.

  இடைக்காலத்தில்தான் சில பள்ளிகளில் இதை ஒரு இபாதத் போன்ற சாயம் பூசி நடத்துகிறார்கள்.
  ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மிகத் தெளிவாக இந்த அரபுப்பாட்டுகளில் உள்ள தவறான கருத்துக்களை சொல்லியும் அது எந்த அளவுக்கு அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்ற
  இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றாக மட்டுமல்ல குழி தோண்டி புதைக்கும் மாற்று எண்ணங்களை
  இஸ்லாமியர்களிடையே தோற்றுவிக்கும் என்று விளக்கமாக சொல்லியும் தெரிந்துகொண்டே இந்த அரபுப்பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது அதையும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது.

  முஹம்மத் தமீம் (மரியம்மா)

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.