பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மதிமுகவில் இணைந்தார்.
தீவிர பெரியார் தொண்டராக இருந்து கடவுள் மறுப்பு கொள்கையை பரப்புரை செய்து வந்தார். இரு வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்று தொடர் பிரச்சாரமும் செய்து வருகிறார். தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில்,மதிமுக தலைமைக் கழகத்திற்கு சென்ற பேராசியர் அப்துல்லாஹ் அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.

மதிமுக அதிகாரபூர்வ இணையதளம் வெளியிட்ட செய்தி
பேராசிரியர் முனைவர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், இன்று (4.9.2011) தமது ஆதரவாளர்களுடன் தாயகத்துக்கு வந்து, வைகோவுக்கு சால்வை அணிவித்து, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் இணைந்தார். கழக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் உடன் இருந்தனர். நான் ஏன் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் இணைகிறேன்? என்பது குறித்து பெரியார்தாசன் வெளியிட்ட அறிக்கை, ஏற்கனவே செய்தித்தாள்களுக்கு இணையத்தின் வழியாக அனுப்பப்பட்டு உள்ளது.
தாயகம், தலைமைக் கழகம்,
4.9.2011 மறுமலர்ச்சி தி.மு.க.
4.9.2011 மறுமலர்ச்சி தி.மு.க.
அஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குஇந்த செய்தி பற்றிய முழு விபரங்கள் வெளியிட்டால் நல்லது.
எப்போது டாக்டர் அப்துல்லாஹ் மதிமுகவில் இணைந்தார் என்ற விபரம் தெரிவிக்கவும்?
வஅலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்)
பதிலளிநீக்குதாஜுதீன் காக்கா, இந்த செய்தி நேற்று(செப்5) அஹ்மது சாச்சா சொன்னார்கள்.
இன்று(செப்6) காலை பேராசியர் அப்துல்லாஹ் அவர்களுக்கு போன் செய்து,நேரடியாகவே தகவலை உறுதி செய்த பின்பே பதிவிட்டேன்.