Breaking News
recent

தோழர்கள் நூல் வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது


அதிகம் அறியப்படாத நபித்தோழர்களின் வரலாறு தோழர்கள் என்ற பெயரில்சத்தியமார்க்கம்.காம் என்ற இணைய தளத்தில் வெளியாகி வருவதை நாம் அறிவோம்.

தாருல் இஸ்லாம் என்ற இதழை நடத்தி புரட்சி எழுத்தாளராய் தமிழக முஸ்லிம்களிடம் அறிமுகம் ஆகி இருந்த அறிஞர் பா. தாவூத் ஷா அவர்களின் பேரர் சகோ. நூருத்தீன் அவர்கள் இத்தொடரை அழகு தமிழில் எழுதி வருகிறார்.

வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இத்தொடரின் முதல் பாகத்தை சத்தியமார்க்கம்.காம் தன்னுடைய முதல் வெளியீடாக வெளியிடவுள்ளது. சகோ. அதிரை அஹ்மது அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் அப்துல்லாஹ், பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

நன்றி:அதிரைXபிரஸ்
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.