உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் சோ. அய்யர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:
சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டப்பூர்வமாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் தவிர, மற்ற அனைவரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் வாக்காளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பாவர்.
துணை வாக்காளர் பட்டியலை தயாரித்த பின், அதை முழுமையாக சரிபார்த்த பிறகே வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்