Breaking News
recent

ஊழல் புகார் எதிரொலி யாசர் அராபத் மனைவிக்கு கைது “வாரண்ட்”


ஊழல் புகார் காரணமாக யாசர் அராபத் மனைவிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   மறைந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின் மனைவி சுஹா அராபத். கடந்த 2006-ம் ஆண்டு இவர் துனிசியாவில் இருந்தபோது, மக்கள் புரட்சியால் பதவி விலகிய முன்னாள் அதிபர் ஷின்அல் அபிடின் பென்அலியின் மனைவி லைலா டிராபல்சியின் நெருங்கிய தோழியாக இருந்தார்.
 
அப்போது இவர் பென் அலி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   துனிசியாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து முன்பு அதிபராக இருந்த பென்அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சுஹா அராபத் மீதும் ஊழல் புகார் காரணமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. அதற்காக அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
 
இந்த தகவலை அட்டோனிசியா என்ற ஆன்லைன் பத்திரிகையில் சட்டதுறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் காதீம் ஷின் அல் அபிடின் தெரிவித்துள்ளார். கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சுஹா அபாரத் தற்போது மால்டா நாட்டில் இருக்கிறார். அங்கு அவரது சகோதரர் கபி அல்-தவில் பாலஸ்தீன தூதராக உள்ளார். எனவே, அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.