Breaking News
recent

சித்தீக் பள்ளிவாசல் நிலம் மோசடியா? கள ஆய்வு 2

அதிராம்பட்டினம் சின்னப்பள்ளி என்ற‌ சித்தீக் பள்ளிவாசல் நிலம் பல கோடி மதிப்புள்ள, பல ஏக்கரை கொண்டது. அது, சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு,அபகரிக்கப்பட்டு பலருக்கு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த காணொளி செய்தி ஒன்றை ஏற்னவே வெளியிட்டோம். அதன் கடைசியில் பள்ளிவாசல் நிலம் சம்மந்தமாக பல சான்றுகள் கிடைத்து வருகின்றது இனி வரும் நாட்களில் அவற்றை தருவோம் என்று சொல்லிருந்தோம். அதன்படி இங்கே...


பள்ளிவாசலுக்கு 1ஏக்கர்59 சென்ட்(1.59) நிலம் சொந்தம்! ஆனால், இப்போது பள்ளிவாசல் கட்டுப்பாட்டில் இருக்கும் இடமோ சொற்ப இடமே உள்ளது. அதாவது சென்ட் கணக்கில்தான் உள்ளது! எனும் போது மற்ற இடங்கள் எங்கே..? காணாமல் போக கையில் இருக்கும் பொருள் அல்லவே!
யாரால் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது?

வக்பு சொத்தை யாரும் வற்கவோ வாங்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை! இன்னும் சொன்னால், வக்பு சொத்தை யாரும் வாங்கி இருந்து, அதை எத்துனை வருடங்கள் அனுபோகம் காட்டிருந்தாலும் நம் நாட்டு சட்டப்படி அது பள்ளிவாசலுக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள்!


பள்ளியின் சொத்து இன்னும் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை!
சிலர் சொல்லுவதுபோல், இது வழி‍-சுவர் பிரச்சினையல்ல சொத்து பிரச்சினையாகும்!! ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்- சொத்து எப்போது எள்ளவும் இல்லாமல் மீட்கப்பட்டு பள்ளியின் கட்டுப்பாட்டிற்கு வருகிறதோ அப்போதுதான்,பள்ளியின் சொத்து பாதுகாகப்பட்டதாக கருதமுடியும்!
பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தின் வரைபடம்

பள்ளிவாசலுக்கு சொந்தமான நில உரிமை பட்டாக்கள்







இன்ஷா அல்லாஹ் தொடரும்...


Unknown

Unknown

1 கருத்து:

  1. நம் ஊரில் பெயர்பெற்ற ஆளீம்கள்தான் இந்த சொத்துக்களை தெரிஞ்சே அனுபவித்து வருகின்றனர் இவர்கள் எல்லாம் அலீம்களா அல்லாஹ் இவர்களையும் நம்மையும் பாதுகபனஹ ஆமீன்........

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.