Breaking News
recent

பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீவைப்பு(பட இணைப்பு)

இலங்கை  மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைமைக் காரியாலயத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். 

சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

வீதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காகச் சென்ற இராணுவத்தினரே தீயை அணைத்துள்ளதாக காத்தான்குடி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவும், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் பெரேராவின் தலைமையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைமைக் காரியாலயத்தில் நேற்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஜ.சுபைரிடம் கேட்டபோது, இந்தச் சம்பவம் நேற்றைய சம்மேளனக் கூட்டத்தைத் தழுவியே இடம்பெற்றுள்ளது எனவும் நேற்றைய கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுளோளின் படி அனைவரும் நோன்பிருந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுமெனவும் இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் ஈடுபடக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதனை விரும்பாத தீய சக்தியினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.


நன்றி:வீரகேசரி
___
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.