காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கம்(OLD STUDENTS ASSOCIATION).துவக்க விழா, மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி இன்று 30/04/2012) திங்கட்கிழமை மாலை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
காதர் முகைதீன் கல்வி நிருவங்களின் செயலர் டாக்டர் எஸ்.எம்.எஸ்.முகமது அஸ்லம் அவர்கள் தலமையில் நடைபெற்றது.பேராசியர் அப்துல் காதர்,பேராசியர் கனபதி,காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ரோசம்மா உள்ளிட்டவர்கள் சங்கத்தின் அவசியம் குறித்து பேசினர்.முனைவர் அஜ்முதீன் தொகுத்து வழங்கினார்.ஆசிரியர் மஹபூப் அலி நன்றி கூறினார்.
அதிரையில் பல்கலைகழகம்
முன்னதாக, தலமை உரையாற்றிய டாக்டர் எஸ்.எம்.எஸ்.முகமது அஸ்லம் அவர்கள் இக் கல்வி நிருவனங்களின் கீழ் ஒரு பல்கலைகழகத்தை துவக்குவதற்கு முழு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அதில் வெற்றி கிட்டும் என்று நம்புவதாகவும் அந்த பல்கலைகழகத்திற்கு காயிதேமில்லத் அவர்களின் பெயர் சூட்ட இருப்பதாகவும் கூறினார். முன்னாள் மாணவர்கள் சங்கம் தங்களின் முயற்சிகளுக்கு துணை நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெண்கள் கல்லூரி
அத்துடன் நமது கல்லூரியில் பெண்கள் சொற்ப அளவில் மட்டும் கற்பது கவலையளிப்பதாகவும்,கூடுதலான மாணவிகள் நமது கல்லூரில் கற்க முன்வரும் பட்சத்தில், அவர்களுக்கு என்று பெண்கள் கல்லூரியை துவக்க இருப்பதாகவும் சொன்னார்.
முதலில் பென்கள் கல்லூரியை துவங்கினால் தானாகவே பென்கள் கல்லூரியில் சேர்வார்கள்
பதிலளிநீக்குதாளாலர் அஸ்லம் அவர்களின் முயற்சி அனைத்தையும்
பதிலளிநீக்குமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் .., அதிரையின்
முன்னேற்றத்திற்கு காதிர்முகைதீன் கல்வி அறக்கட்டளை
மறை முகமாகவும் .,நேரடியாகவும் ..,பலவகையில்
உதவியுள்ளது ..பழைய தஞ்சை மாவட்டம் .புதுகோட்டை மாவட்டத்து
மக்களின் மேற்படிப்பு என்றாலே கா.மு.கல்லூரி தான் என்றிருந்தது ..
பல்கலை கழகமாக விரிவடைய என் வாழ்த்துக்கள்