Breaking News
recent

83 பேர் பலி; பலி எண்ணிக்கை கூடும் என அச்சம்


வங்காளதேசத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு: 83 பேர் பலி
தாகா. ஜூன். 27 - 
 
வங்காளதேசத்தில் தென்மேற்கு மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ  மழை பெய்து வருகிறது. நேற்று திடீரென பெய்த கன மழைக்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 83 பேர் பலியாகியுள்ளனர்.
 
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி  உயிரிழந்திருக்கலாம் என்றும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க கூடும் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான காக்ஸ் பஜார் பகுதியில் மட்டும் 34 பேர் இறந்துள்ளனர். பந்தர்பன் மலைப்பகுதி மற்றும் சிட்டகாங் பகுதியில் பலர் உயிரிழந்துள்ளனர் என மீட்புகுழுவில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரும் பொதுமக்களும் தெரிவித்தனர்.
 
பல இடங்களில் மண்சரிந்து ரோடுகள் அடை பட்டிருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட பருவ மழைக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள்  சேதமடைந்துள்ளதால் 50000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதுபோன்று மேகாலயாவின் ஜேண்டிய மலைபகுதியில் பல இடங்களில் ஏற்ப்பட்ட நிலச்சரிவில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விரைவில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களை சென்றடையும் என அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.