Breaking News
recent

மின்வெட்டு இல்லாத தமிழகம்:தமிழக முதல்வரின் சாதனை!

தமிழகத்தின் மின் நிலைமை குறித்து முதல்வர் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று(ஜூன்1) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் மின்வெட்டை படிப்படியாகக் குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:


கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிகளவு மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மாநிலத்தின் மின் நிலைமை இப்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாது, மே 10-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.


இதையடுத்து, வெள்ளிக்கிழமை(1/06/12) முதல் மீண்டும் மேட்டூர் அனல் மின் நிலையம், தனது முழு உற்பத்தித்திறனான 840 மெகாவாட் மின்னுற்பத்தியை தொடங்கி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், மின் தட்டுப்பாடு காரணமாக இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இன்று (ஜூன் 2) முதல் தளர்த்துவது என முடிவு எடுக்கப்பட்டது.


உயர் மின் அழுத்த மற்றும் குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியன முற்றிலுமாக நீக்கப்படுகின்றன.
சென்னையில் வீட்டுப் பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு இரண்டு மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் இருந்து மூன்று நேரமாகவும் குறைக்கப்படும்.


இப்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் நிலையத் திட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் ஆகியன விரைவில் செயல்படத் தொடங்கும். எனவே, இப்போதுள்ள மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இது குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டு, உரிய முடிவுகள் எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



மின்வெட்டில்லாத தமிழகம்!
தமிழகத்தின் ஒரு நாள் மின்தேவை சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இன்றைய நிலவரப்படி மின்னுற்பத்தி அளவு 10,400 மெகாவாட்டாக உள்ளது. எனவே மின் பற்றாக்குறை ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.

இனி வரும் மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையமும், மேலும் சில அனல் மின் நிலையத் திட்டப் பணிகளும் செயல்பாட்டுக்கு வரும்போது மின் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கிவிடும்.
மின் பற்றாகுறை ஏற்பட்டதும், பல கண்டங்கள்,ஆர்பாட்டங்கள்,அறிக்கைகள்,கடையடைப்பு,மறியல் என்று அரசியல் கட்சிகள் செய்தபோதும் பதற்றம் அடையாமல் மின் உற்பத்தி உண்மைநிலையை மக்களுக்கு அறிவித்து அத்துடன் மின் தட்டுப்பாட்டை முற்றிலும் நீக்க துரிதமகாவும்,விவேகத்துடனும் செயல்பட்டு,சாதனை செய்துள்ள தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்களை மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
Unknown

Unknown

1 கருத்து:

  1. என்ன சாதனைய கிழி---------------டாரு? இவ்வளவு நாளா நாம பட்ட துன்பங்களையெல்லாம் மறந்திட முடியுமா?? மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தல் வருமேயானால் அம்மாவின் சீட்டுக்கு சங்குதான் போஸ்டாரே.....பூம்....பூம்....பூம்..

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.