Breaking News
recent

நவீனகால சைத்தானுக்கு தூக்குதண்டனை இல்லை!


முன்னாள் எகிப்து அதிபரும் நவீனகால சைத்தானுமான ஹோஸ்னி முபாரக் (84). இவனது 32 ஆண்டு கால சைத்தானிய ஆட்சியை எதிர்த்து கடந்த ஆண்டு பொதுமக்கள் புரட்சி நடத்தினர். இதைத்தொடர்ந்து அவனது ஆட்சி வீழ்ந்தது.  
சைதான் முபாரக்கும் அவனது குட்டி சைத்தான்களான (மகன்கள்) அலா, கமால் முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவன்கள் மீது ராணுவ கோர்ட்டில் 846 பேரை படுகொலை செய்ததாகவும் ஊழல் செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கு விசாரணை முடிந்து, அவன் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை(02/06/12) அவனது தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு கூறப்பட்டது. அத்தீர்ப்பில் சைத்தான் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவனது மகன்கள் அலா, கமால் முன்னாள் உள்துறை மந்திரி ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 அதிகாரிகளுக்கும்  ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சைத்தான் முபாரக் மற்றும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் எழுதின.  அவனது ஆதரவாளர்கள் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
சைத்தானின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால், அதை சமாளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கலவரத்தில் ஈடுபடு பவர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இஸ்ராயிலில் தஞ்சம் புக விரும்பிய சைத்தான் ஹோஸ்னி முபாரக்!

சைத்தானை எதிர்த்து நடந்த புரட்சியில் ஆட்சி இழந்ததும் ஸவூதி அரேபியாவில் தஞ்சம் புக நினைத்தான்.(வழக்கமாக இது போன்ற இஸ்லாமிய எதிர்ப்பு ஆட்சியாளர்களுக்கு ஸவூதி அரசு தஞ்சம் அளிக்கும்)ஆனால்,
துனிஷிய சர்வாதிகாரியை ஏற்றுக்கொண்டு, இந்த முபாரக்கை 
 கை கழுவி விட்டது .தங்களது நாட்டிலும் ஏதேனும் புரட்சி எற்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில்தான்,சைத்தான் ஹோஸ்னி முபாரக் இஸ்ராயிலில் தஞ்சம் புக விரும்பினான் 


உலகின் நம்பர் ஒன் பணக்காரன்

இந்த சைத்தான் உலகின் நன்பர் பணக்காரனாகவும் இருக்கிறான்.  என்று "தி கார்டியன்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. சைத்தான் முபாரக் ஆடம்பர பங்களா மற்றும் ஓட்டல்களில் முதலீடு செய்துள்ளான். வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ளான். இவற்றை கணக்கிட்டால் இவனது சொத்து மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரன் இவன் தான்' என்று தெரிவித்துள்ளது.பணக்காரர் பட்டியலில் 2,40,750 கோடி ரூபாயுடன் மெக்சிகோ தொழிலதிபர் கார்லஸ் சிலிம் இரண்டாம் இடத்திலும், 2,38,500 கோடி ரூபாயுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

கோர்ட்டில் தீர்ப்பு அளித்தபோது...
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.