Breaking News
recent

முர்ஸியின் வெற்றி:மகிழ்ச்சி,ஆரவாரம்,வாழ்த்து,அல்லாஹ்வுக்கு நன்றி !


இஹ்வான்களது வேட்பாளர் கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிச் செய்தியால் எகிப்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூழ்கியுள்ளது. உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியவாதிகள் இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தஹ்ரீர் சதுக்கத்திலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஒன்றுகூடிய முர்ஸியின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி பதாகைகளையும் எகிப்தின் தேசியக் கொடியையும் அசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முர்ஸியின் வெற்றி இராணுவ ஆட்சியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. இராணுவத்திற்கு எதிரான மக்கள் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இராணுவத்திற்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் வீதியில் இறங்கி இந்த மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
முர்ஸியின் வெற்றி முழு எகிப்தியர்களின் வெற்றியாகும் – அந்-நூர் கட்சி
Nader-Bakkarஇஹ்வான்களின் வேட்பாளர் கலாநிதி முர்ஸியின் வெற்றி முழு எகிப்திய மக்களின் வெற்றியாகும், குறிப்பிட்ட அரசியல் குழுக்களின் வெற்றியில்லை என ஸலபிக்களின் கட்சியான அந்-நூர் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் நாதர் பாக்கர் தனது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் அதில் தெரிவிக்கையில், ஏப்ரல் 6 இளைஞர் அமைப்புக்கும், கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.


அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன். இது எல்லோருக்குமான வெற்றி – முர்ஸி


அத்துடன் இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எகிப்தைக் கட்டியெழுப்புவதற்கான காலம் மலர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஹமத் ஷபீக்குக்கு வாக்களித்தவர்களும் எகிப்தியர்களே, ஆகவே நாம் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் முதலாம் கட்ட வாக்களிப்பின்போது அந்-நூர் கட்சி ஆப்துல் முன்இம் அபுல் புதூஹை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.
 “இந்த வெற்றிக்காக நான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன். சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஆதரவாக வாக்களித்த எல்லா எகிப்தியர்களுக்கும் நன்றிகள். இது எல்லா எகிப்தியர்களுக்குமான வெற்றியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி நிறைந்த ஆதரவாளர் கூட்டத்தின் மத்தியிலேயே அவர் இந்த மாநாட்டை நடத்தினார். “நாம் சமாதானத்தின் செய்தியையே கொண்டுவந்தோம். புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும், எகிப்தின் உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்கும், முஸ்லிம்களது எகிப்துக்கும் கிறிஸ்தவர்களது எகிப்துக்கும் – என எல்லோருக்கும்தான் நாம் இந்த செய்தியைக் கொண்டுவந்தோம்
இதன்பின்னர், “சுதந்திரமான புரட்சியாளர்களது வெற்றி தொடரும். இராணுவ ஆட்சி வீழட்டும்என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
புரட்சியில் ஷஹீதானவர்களது குடும்பத்திற்கு, அவர்களது சட்ட ரீதியான உரிமை கிடைக்கும் என நான் உறுதிப்படுத்துகிறேன்
கலாநிதி முர்ஸியின் உரை எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்தது. நவீன சிவில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தமது முதன்மையான பணி எனவும், கிறிஸ்தவர்களது அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும். அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் தமக்கில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எகிப்தின் கணிசமான கிறிஸ்தவர்கள் அஹ்மத் ஷபீக்கிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியாளர் மாநாட்டின் பின்னர், கலாநிதி முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்திற்கு சென்றதாக இஹ்வான் ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
Mursi-Dr,

Egypt-Elction-4
Egypt-Elction-6
Egypt-Elction-5
Egypt-Elction-2
Egypt-Elction-1



Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.