Breaking News
recent

இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியின் பாடத்திட்டம் ஒரு ஆய்வு! முந்தையப் பதிவின் தொடர்ச்சி...

மாம் ஷாஃபி(ரஹ்) பள்ளி கடந்த முப்பத்தி ஏழு ஆண்டுகளாக செயல்பட்டுவரும் கல்வி நிலையம். அது பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இன்னும் சொன்னால், அதிரை கல்வி வரலாற்றில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹமதுலில்லாஹ்!

ஆனால், கடந்த மூன்று,நான்கு ஆண்டுகளாக அதன் கல்வி திட்டத்தில் தடம் புரண்டுள்ளது. இதனால்,அதிரையின் கல்வியாளர்கள்,மார்க்க அறிஞர்கள்,இளைஞர்கள்,பெற்றோர் என அனைத்து தரப்பினர்களையும் வேதனையும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

எதற்குதான் இந்த வேதனையும் கவலையும்?

உலகைப்படைத்தான் அல்லாஹ் மனிதனுக்காக; மனிதனைப்படைத்தான் அவனை வணங்குவதற்காக! இதுதான் உலகில் நம்மை அல்லாஹ் படைத்தற்கான சூத்திரம்-
ஆனால், அல்லாஹுவை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக- அல்லாஹ் அல்லாத வேறு கோட்பாடுகளை இறைவன் என்று அறிமுகம் செய்யும் பாடத்திட்டம் இங்கு போதிக்கப்படுகிறது என்பதே பிரச்சினையாகும்!

கடந்த மூன்று,நான்கு ஆண்டுகளாக,இதே பிரச்சினைதான். ஆசிரியர்,தலைமையாசிரியர்,நிருவாகம் உள்ளிட்ட பள்ளி தரப்பிடம், சமுதாயத்தின் அனைத்து தரப்பினர்களும் கவலையோடு ஆலோசனை சொன்னார்கள்,புகார்களாக தெரிவித்தார்கள் எதற்கும் அசைந்து கொடுக்காதபோது மேடையிலும் பேசினார்கள். 

எல்லாவற்றிற்கும் ஒரே பதிலைத்தான் தந்தார்கள்- தவறு நடந்துவிட்டது இன்ஷாஅல்லாஹ் வரும் கல்வியாண்டில் மாற்றிவிடுவோம்” என்பதே அது!
அனால், மாற்றினார்களா பாடத்திட்டத்தை? இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
பதில் ஒன்றுதான் முன்றாண்டுகளாக சொல்லப்படுகிறது!

இந்த கல்வியாண்டும்(2012-2013) அதே கல்வி சரக்குதான். கொதித்துப்போனார்கள் நற் சிந்தனையாளர்கள். இந்நிலையில், பேராசியர் அப்துல் காதர் அவர்களை சந்தித்து சொன்னபோது “இதில் என்ன தவறு இருக்கு அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய விசயம்தானே? சில விசயங்களை நாங்கள் திருத்த முனைகிறோம்.மேலும் விபரங்களுக்கு பேராசியர் அப்துல் பரகத் அவர்களிடம் கேளுங்கள் அவர்கள்தான் பாடத்திட்ட தேர்வு குழு பொருப்பாளர் என்று சொல்லியுள்ளார்.

பேச்சுவார்த்தையில் திருப்தியா?

பேராசியர் அப்துல்காதர் அவர்களைத்தொடர்ந்து, இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளியின் மூத்த தலைமையாசியர் பேராசியர்- எங்கள் அன்பு ஆசான் அப்துல் பரகத் அவர்களை செவ்வாய் கிழமை (26/06/12) காலை குழுவாக சந்தித்தோம். அப்போது அவர்களிடம் பாடத்திட்டத்தில் இறை மறுப்பு,இறை நிராகரிப்பு,இறை விரோத செயல்களை ஊக்குவிக்கும் பக்கங்களின் நகல் பிரதிகளை கொடுத்து, எங்கள் கருத்துக்களையும் சொன்னோம்.

அமைதியாக கேட்டார்கள். பதிலும் தந்தார்கள்: அவற்றில் சில...

·         நாங்களும் வருந்துகிறோம்
·         ஏழு நபர்கள் ஆய்வு செய்தோம்
·         பல பதிப்பாளர்களிடமிருந்து வந்த புத்தகத்தில் இதில் தான் குறைந்த தீய கருத்துக்கள் உள்ளது.அதனால்தான் இதனை ஏற்றுக்கொண்டோம்.
·         இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள பதிப்பகங்களிடம் மட்டும்தான் புத்தகம் வாங்குகிறோம்.
·         முடிந்தால் நீங்களே நல்ல புத்தங்களை வாங்கித்தாருங்கள்.அதை நாங்கள் ஆய்வு செய்து அதன் பிறகு முடிவு செய்வோம்(என்று எங்களிடம் சொன்னார்கள்)

இதில் எங்களுக்கு திருப்பி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இல்லை:ஏன்?

·         பல வருடமாக ஒதே பதிலைத்தான் சொல்கிறார்கள்
·         ஏழு நபர்கள் ஆய்வு செய்தும் தவறு ஏற்பட்டுள்ளதே?
·         பதிப்பாளர்களிடம் வந்ததைதான் தேர்வு செய்ய வேண்டும்.?
·         நல்ல புத்தகத்தை ஏன் விசாரித்து-ஆய்வு செய்து தேர்வு செய்யவில்லை?
·         கல்வியாளர்கள் நீங்கள் இருக்கும் போது,அத்துறை சாராத எங்களால் எப்படி தேர்வு செய்ய முடியும்?

இதனால்தான் எங்களுக்கு இந்த பதிலில்-பேச்சுவார்த்தையில் நம்பிக்கையோ திருப்தியோ இல்லை என்கிறோம். இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளி நிருவாகம் பல்வேறு பொருளாதார கஷ்டங்கள்,சிக்கல்களுக்கு மத்தியில் நடாத்தி வருகிறது. நிர்வாகத்தினர் பள்ளி சிறப்பாக செயல்பட தங்களது முழு உழைப்பையும் தந்துவருகிறார்கள். ஆனால், பள்ளியை களத்தில் நின்று நிர்வகிக்கும் ஆசியர்கள்,தலைமையாசிரியர்களின் பொறுப்புதான் அன்றாட சிக்கல்களை கவனிப்பது,சீறுடை,தளவாடங்கள்,பாடத்திட்டங்கள் உள்ளிட்டவைகள்!
நடந்துவரும் தவறுகளுக்கு எப்போதுதான் தீர்வு? விடை தெரியாத வினாக்களோடு விடைபெற்றோம்!
பாடப்புத்தகத்தில் ஆட்சேப பக்கங்களை இந்த லிங்கில் பார்க்க:

இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளி பாடத்திட்டம்: அடுத்த பதிவிற்கான முன்பதிவு



Unknown

Unknown

5 கருத்துகள்:

  1. இந்த பாடங்களை இருட்டடிப்பு செய்து விட்டு

    மாணவர்களுக்கு மற்ற பாடம் நடத்தலாமே

    பதிலளிநீக்கு
  2. லாரல் பள்ளிக்கு நம் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என்று நாம் நினைத்தால் அதைவிட மோசமான பாடத்திட்டம் இந்த இமாம்சாபி பள்ளிக்கூடத்தில் நடைபெற்று
    வருகின்றன நம் இஸ்லாத்தின போக்கைமாற்றகூடிய இதுபோன்ற பள்ளிக்கூடத்தை நாம் புறக்கணிபோம் அதிரை நண்பர்களே வீழித்து கொள்ளுங்கள்.....

    பதிலளிநீக்கு
  3. வண்மையாக கண்டிக்கத்தக்கது அந்த பள்ளியின் நிர்வாகிகள் படித்த மேதைகளாக இருந்தும் இதை கண்டும் காணாமல் அனுமதித்திருப்பது வேதனையளிக்கிறது .
    உடனடியாக இந்த பாட புத்தகங்களை திரும்ப பெற்று முறையான பாட திட்டத்தினை போதிக்கவேண்டும் அப்படி மறுக்கும் பட்ச்சத்தில் அதிரை இந்திய தவ்ஹீத் ஜாமத் சார்பில் போராட களத்தில் இறங்க வேண்டி இருக்கும் என்பதை இமாம் ஷாபி நிர்வாகத்திற்கு சொல்லி வைக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. அக்கரையான பதிவு. வாழ்த்துகள் தம்பி.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.