Breaking News
recent

எகிப்து தேர்தல்: முகமது முர்ஸி வெற்றி!


எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜுன் 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் முடிவை தேர்தல் கமிஷன் செயலாளர் பரூக் சுல்தான் இன்று(24/06/12) பிற்பகல் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
இதில் இஹ்வான்களின் வேட்பாளர் முகமது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளை பெற்று 51.73 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தார்.இவருடன் போட்டியிட்ட அஹமத் சபீக் 12.3 மில்லியன் வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.முகமது முர்ஸி எகிப்தின் அதிபராக வருகிற 1-ந்தேதி பதவி ஏற்பார்.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முஹமத் முர்ஸி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இராணுவம் மேலதிக அதிகாரத்துடன் நாட்டின் சிவில் நிர்வாகத்தில் தலையீடுகளை கொண்டுள்ள முக்கிய சக்தியாக மாறியுள்ளது . 

இந்த நிலையில் , பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை , இராணுவ நிர்வாகம் தமக்கு நாட்டின் சிவில் நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்தும் மேலதிக அதிகாரங்களை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்பன சர்ச்சைகுரிய விசயமாக மாறியுள்ளது .

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதையும், இராணுவம் தனக்கு மேலதிக அதிகாரங்களை பிரகடனப்படுத்தியுள்ளதையும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு ஏற்றுகொள்ளாது என்று அறிவித்துள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.