Breaking News
recent

அதிரை ரமழான் புகைப்படங்கள் 6: தொழுகை முடிந்ததும் விறு விறு சுக்கு மல்லி காபி




சுக்கு மல்லி காபி சிறு அறிமுகம்!
சுக்கு, கொத்தமல்லி, சீரகம் மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம். பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.
கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏனம், ஜாதிக்காய், மிளகு, குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் முதலியன. இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் தயாரிக்க
ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம். சிறிது பால் அல்லது தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.
  • செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
  • அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்


Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.