Breaking News
recent

சிறுபான்மையினரின் மறுவாழ்வுக்கு நிதி:தஞ்சை மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவிப்பு

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட, சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தது:
 
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தோர், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வதற்காகவும், சிறு வணிகம் செய்து, மறுவாழ்வு பெறுவதற்காகவும் நிதியுதவியாக அதிகபட்சம் ரூ. 10,000 வரை வழங்கப்படுகிறது.
 
இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில், ஊனமுற்றிருந்தால் அல்லது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெருங் குற்றங்களாகக் கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதல் முறையாக சிறு குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து மீண்டவராகவும் இருக்க வேண்டும்.
 
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவராக இருந்தால், மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து, சான்றை அளிக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால், வட்டாட்சியரிடமிருந்து பொருள் இழப்பீட்டுச் சான்று பெற்று அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.