Breaking News
recent

நோன்பு ஒரு மருத்துவப் பார்வை -Dr. முர்ஸலீன்


அல்லாஹ் நோன்பைகடமையாக்கியதன் நோக்கத்தைஇறையச்சம் எம்மில் குடி கொள்வதே எனக் குறிப்பிடுகிறான். ஒரு மனிதனில் இறையச்சம் ஏற்படுகின்றபோதுஅவனது வாழ்வு அவன் யாருக்குப் பயப்படுகின்றானோஅவனது கட்டளைகளை முழுமையாக அச்சோட்டாகப் பின்பற்றுவதாகவே அமையும். அந்த வகையில் ஒரு முஸ்லிம்ஒரு முத்தக்கீ (தக்வா உடையவர்) இஸ்லாத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவராகவே இருப்பார்.
இஸ்லாம் உண்மையில் தனது கடமைகள்சட்டங்கள் மற்றும் உபரியான வணக்கங்கள் - எல்லாவற்றையும் ஏற்படுத்தி இருப்பதன் நோக்கம்மனிதன் ஆரோக்கியமான சமநிலையானவனாக மாற வேண்டும் என்பதும் மற்ற மனிதனோடு சகவாழ்வு வாழ வேண்டும் என்பதுமாகும்.
இந்த வகையில் நோன்பு எவ்வாறு மனிதனை இவ்விலக்குகளை நோக்கி நகர்த்துகிறது என்பது கூர்ந்து கவனிக்கவல்லது. ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கனத்தின்படி ஒருவன் தனது உடல்உளசமூக மற்றும் ஆன்மீக ரீதியாக- அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக- அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.
நோன்பானது ஒரு மனிதனின் இந்த நான்கு பகுதிகளையும் எவ்வாறு அவனைக் கவனம் குவிக்கச் செய்கிறது என்பதை ஆழ்ந்து நோக்கும்போது எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கும். மருத்துவ ஆவுகளின்படி மனிதனது சமிபாட்டுத் தொகுதியே அவனது அனைத்து நோய்களினதும் இருப்பிடமாகும்.
நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்துஉடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கிஉடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டிஉடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் அங்கங்களை மறுசீரமைக்கின்றது.
லீன் ஞதேவ் என்கிற மருத்துவ ஆய்வாளர்இயற்கை மாற்றீடுகள் எனும் தனது புத்தகத்திலே, -நோன்பானது உடலின் இயற்கை நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உடற்பாகங்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும்பக்டீரிய எதிர்ப்பு இரத்தக் கலங்களை அவற்றினது திறனில் பல மடையச் செய்கிறது- என குறிப்பிடுகிறார்.
இதனையே றஸூல் (ஸல்) அவர்கள் "உங்களது நோயாளிகளுக்கு நோயின் ஆரம்பத்தில் உண்ணலையோ குடித்தலையோ பலவந்தப்படுத்தாதீர்கள்" என்றார்கள். மேலும்சமிபாட்டுத் தொகுதி ஓய்வெடுக்கும்பொழுது- அதன் உள்வெளி உறையான சீதப்பகுதி- நமது பிழையான உணவுப் பழக்க வழக்கங்களால் பாதிப்புற்றிருந்தால்அதனை மீள ஒழுங்கமைத்துக் கொள்ள ஒரு அவகாசமாய் பயன்படுத்தும்.
அவற்றுடன் உடலின் நஞ்சகற்றும் பிரதான அங்கமாகிய ஈரற் கலங்களும் ஊக்கப்படுத்தப்படும். மேலும் சிறுநீரகம்பெருங் குடல் என்பன இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை வழமையை விட திறனுடனும் உத்வேகத்துடனும் நோன்பின்போது செய்யும்.
இச் செயற்பாடுகள் உடலில் மேலதிகமாக தேங்கி இருக்கின்ற நீரை அகற்றுவதற்கும்உடலில் படிந்திருக்கின்ற கொழுப்பை கரைப்பதற்கும்குருதிக் கலன்களில் படிந்திருக்கின்ற மேலதிக கொலஸ்ட்ரோல் போன்ற உடலுக்கு பாதிப்பான நஞ்சுகள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படவும் ஏதுவா அமையும்.
மேலும்மூளையின் செயற்பாடு அதிகரித்து சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். மேற்சோன்ன அவதானங்களை நோக்கும்போழுதுஒரு மனிதன் சிறந்த முறையில் நோன்பை நோற்கும் பொழுது அவன் உடல் ரீதியாக ஒரு சுகதேகியாக மாறுகிறான்.
இன்று எம்மை ஆட்டிப் படைக்கும்நீரிழிவுகொலஸ்ட்ரோல்உயர் குருதி அழுத்தம் மற்றும் புற்று நோய் போன்ற மோசமான நோகளுக்கு நோன்பு வருமுன் காக்கும் கேடயமாகவே அமைகிறது.
நோன்பை சரியான முறையில் நோற்கும்போது உடல் சம்பந்தமாகவும்உணவுப் பழக்கங்கள் பற்றியும் கவனிக்கத்தக்க விடயங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
நோன்பு காலங்களில் பிரதான உணவு வேளைகள் இரண்டோடு மட்டும் போதுமாக்கிக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கத்தை அடைவதற்கு ஏற்றதாகும். ஸஹர்இப்தார் என்பனவே அவை. ஸஹரை நாம் கட்டாயம் உட்கொண்டே ஆக வேண்டும். ஸஹர் நேரத்தில் குறிப்பாக எமது நாட்டைப் பொறுத்தவரை வழமையான உணவை (சோற்றை) உன்பதில் தவறில்லை.
ஆனாலும் பாரமற்ற உணவுகளை தெரிவு செய்வதே உகந்ததாகும். சலாது வகைகள்மரக்கறிகள்,பழங்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்ளலாம். எமது அடிப்படை "எதுவும் அளவுக்கு அதிகமாகக் கூடாது" என்பதே. அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு நோன்பு பகல் நேரம் கடினமானதாகவும் அசதி நிறைந்ததாகவுமே காணப்படும்.
இப்தார் நேரத்தில் பேரீத்தம் பழமும் பாலும் பாவிப்பதே சிறந்ததாகும். பேரீத்தம் பழம் உடனடி சக்தியை வழங்குவதோடு விட்டமின் ABமக்னீசியம்பொட்டாசியம்பொஸ்பரஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் நார்ச் சத்தும் காணப்படுவதால் மலச்சிக்கலை நீக்குவதோடுகொலஸ்ட்ரோலையும் குறைக்கவல்லது.
பாலில் பல உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதோடுகொழுப்பையும் கொண்டிருப்பதால் பேரீத்தம் பழத்தின் சீனி உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்திஇரத்த குருதி குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். றஸூல் (ஸல்) அவர்களின் இப்தார் பாலும்பேரீத்தம் பழமாகவுமே அமைந்திருந்தது என்பது வியக்கத்தக்கது.
அத்தோடு மரக்கறி சூப்புகளையும் சலாதுகளையும் இப்தாரில் சேர்த்துக் கொள்வது சிறப்பானது. எமது நாட்டில் வழக்கத்தில் காணப்படும் கஞ்சி’ சிறப்பானஇலகுவில் சமிபாடடையக் கூடிய பாரமற்ற உணவாகும்.
ஆனால்இன்று கஞ்சி உடலுக்கு தீங்கு பயக்கும் அளவை அடைந்து விட்டது கவலைக்குரியது. மிகக் குறைந்த தேங்காய்ப் பாலுடன் மேலும் எண்ணெய்கொழுப்பு குறைத்து அதிக திரவத் தன்மையுடைய கஞ்சியை வரவேற்கலாம்.
மேலும்மேற்குறிப்பிட்ட பலன்களை றமழானில் அடைய வேண்டுமாயின்அதிக எண்ணெய்யில் பொரித்த மற்றும் ஃபாஸ்ட் ஃபூட் எனப்படும் கடைகளில் விற்கப்படும் தின் பண்டங்களை இயன்றளவு தவிர்ப்பதே சிறந்தது. இரவு நேரம் முழுவதிலும் குறைந்தது 1.5 லீற்றர் நீரையாவது அருந்துவது நல்லது.
இப்தாருக்குப் பின் உடனடியாகத் தூங்க வேண்டாம். முடியுமாயின் சிறிது தூரம் காலாற நடப்பது மிகச் சிறந்ததாகும். உண்மையான முறையில் அதிகம் உண்ணாமல் நீங்கள் நோன்பு நோற்பீர்களாயின்உங்களது உடலில் நஞ்சகற்றப்படுவதற்கான இயல்பான சில அறிகுறிகளை நோன்பின் ஆரம்ப நாட்களில் உணர்வீர்கள்.
குறிப்பாக தலைவலிஅசதி மற்றும் வாய் நாற்றம் என்பன ஏற்படுவதானதுஉங்களது உடலில் நஞ்சகற்றல் இடம்பெறுகிறது என்பதற்கான இயல்பான அடையாளங்களாகும். அதிக நீர் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம் இவற்றிலிருந்து மீளலாம்.
அடுத்து மனிதனது உளசமூக மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தில் நோன்பு மிக வெளிப்படையாக பாரிய பங்காற்றுகிறது. மனிதன் தான் விரும்பும் அனைத்தையும் விட்டு விடுவதும்,தனிமையிலும் அவற்றை அனுபவிக்காது விடுவதும்அவனது உள்ளத்தில் நாட்ட சக்தி அதிகரிப்பையே காட்டி நிற்கிறது.
மேலும்நோன்பின் ஒழுக்கங்களைப் பேணி நோன்பை நோற்கும்போதுமற்ற மனிதர்களது சமூக உறவைப் பாதிக்கின்ற பொய்புறம்கோள் சொல்லல்வசைபாடல் போன்ற சகல துர்ச் செயல்களிலிருந்தும் விடுபடுகிறான். அத்துடன் அடுத்த மனிதனால் விரும்பப்படுகின்றசமூக ஒழுங்கைப் பாதிக்காத ஒருவனாக மாறுகிறான். இவற்றின் மூலம் உளசமூக நோய்களிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான்.
றமழானைத் தொடர்ந்து வரும் காலங்களிலும்சமூகத்திற்கு ஏற்ற பிரஜையாக வாழ பயிற்றுவிக்கப்படுகிறான். மேலும்ஏழைகளின் பசியை உணர்தல்இல்லாதவர்களுக்கு தனது செல்வத்திலிருந்து வாரி வழங்குதல் போன்ற சமூக பொருளாதார சமநிலையை நோக்கிய சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டப்படுகிறான்.
இவற்றோடு இரவு முழுவதும் நின்று வணங்குதல்பகல் முழுவதும் திலாவத் போன்ற அளப்பரிய நண்மைக்குரிய காரியங்களை அதிகமதிகம் செய்வதன் ஊடாகஆன்மீக ரீதியான ஆரோக்கியத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறான்.
மொத்தத்தில் உடல்உளசமூக மற்றும் ஆன்மீக நலனை பூரணமாக அடைந்து கொள்ள,நோன்பை விஞ்சிய வேறெந்த மருத்துவமும் இருக்க முடியாது. எனவேசிறப்பான முறையில் நோன்பு நோற்று இம்மையில் சுகதேகிகளாகவும் மறுமையில் ரய்யான் என்ற வாயிலினூடாக சொர்க்கம் செல்லும் பாக்கிய வான்களாகவும் அல்லாஹ் எம்மை ஆக்கியருள்வானாக.
நன்றி:மீள்பார்வை
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.