Breaking News
recent

வளைகுடா நாடுகளுக்கு கேரளா மாநில அரசு சார்பில் விமானம்

வளைகுடா நாடான மஸ்கட்டில் கேரளா முஸ்லிம் கலாசாரம் மையம் சார்பாக நடத்தப்பட்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளா எம்பி இ.டி. முஹமது பஷீர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

வளைகுடா நாடுகளில் கேரளாவை சேர்ந்த நிறைய பேர் வேலை பார்த்துவருகின்றனர். அங்குள்ள வெளிநாட்டு இந்தியர்கள் விமானம் மூலம் கேரளாவுக்கு வர மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கிய விசேச காலங்களில் கேராளாவுக்கு வருவதற்கான பயணசீட்டு வாங்க அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. 

அவர்களின் சிரமத்தை குறைக்க கேரளாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே "ஏர் கேரளா" என்னும் அரசின் சொந்த விமானப்போக்குவரத்து தொடங்கும் திட்டம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு "ஏர் கேரளா"என்னும் பெயர் நான்கு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுவிட்டது. 

பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் கட்டப்பட்ட கொச்சி விமான நிலையத்தை போல் இந்த "ஏர் கேரளா" விமானப போக்குவரத்தும் இயங்கும். இந்த போக்குவரத்து தொடங்குவது குறித்து முதலமைச்சர் உம்மன் சாண்டியை சந்தித்து நான் பேசியிருக்கிறேன். அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

"ஏர் கேரளா" விமானப் போக்குவரத்து தொடங்குவதில் பொருளாதாரப் பிரச்னை ஏதும் இல்லை. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான கூட்டத்தில் விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.