Breaking News
recent

இஸ்லாமிய பொருளாதாரத்தின் நடைமுறை - ஷெய்க் உஸ்தாத் மன்சூர்


இஸ்லாமியப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் கண்ணோட்டத்தில் நடைமுறைத் தன்மை என்பது என்ன? இஸ்லாமியப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை என்பவற்றின் குணாதியசங்களின் அடிப்படையில் நோக்கும் போது இஸ்லமிய ஷரீஆவின் சட்ட வரைபுகள், நடைமுறை வாழ்வின் ஒழுங்குகள், இயழ்புகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுடன் ஒத்துச் செல்வதையே குறிக்கும்.


 இஸ்லாமிய ஷரீஆ, எதிர்கால முடிவுகள், நிகழ்வுகள் மற்றும் விளைவுகள் தொடர்பான எடுபோள்கள் மற்றும் ஊகங்கள் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்வதில்லை. அதன் சட்ட வரைபுகள், பொருளாதார முகவர்கள் மற்றும் பொருளாதார மாறிகளின் எதிர்கால போக்குகள் பற்றிய எடுகோல்களினோ அல்லது ஊகங்களினோ அடிப்படையில் அமைந்ததல்ல. மேலும் அப்பொருளாதார முகவர்களும், தரப்பினர்களும் எத்தகைய எடுகோள்கள், எதிர்பார்ப்புக்களை மேற்கொண்ட போதும், அவை ஷரீஆ சட்ட விதிமுறைகளில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் இஸ்லாமிய ஷரீஆவின் சட்டவரைபுகள் நடைமுறைவாழ்வில் இடம்பெறும் உண்மை நிகழ்வுகளையும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன.
 அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் நடைமுறைத்தன்மைக்கான மூலங்கள்

 இஸ்லமிய சட்டங்களில் நடைமுறைத் தன்மைக்கான மூலங்கள், இஸ்லாத்தின் இரு பிரதான மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவிலேயே காணப்படுகின்றன. அல்குர்ஆனானது, இருபத்துமூன்று வருடகாலமாக முஹம்மத் நபி (ஸல்), ஸஹாபாக்கள் மற்றும் அவர்களது சமூகத்தின் அன்றாட நடைமுறைவாழ்வில் இடம்பெற்ற சம்பவங்கள், நகழ்வுகள் ஆகியவற்றுக்கான பதிலாக அல்லது தீர்வாகவே இறங்கப்பெற்றது. அக்காலப்பகுதியில் ஏதாவதொரு சம்பவம் இடம்பெறும் போது, சம்பவத்திற்கான ஷரீஆ விதிமுறைகளை முன்வைக்கும் வகையில் ஒரு சில குர்ஆன் வசனங்கள் இறங்கப்பெற்றன. ஆகவே அல்குர்ஆன் இறங்கப்பட்ட முறையை வைத்து நோக்கும்போது, குர்ஆன் வசனங்கள் இஸ்லாமிய ஷரீஆவை வெறும் கோட்பாடாகவே அனுமானிக்கப்பட்ட முடிவுகளாகவோ அன்றி உண்மை சம்பவங்களையும் நிகழ்வுகளையும் கையாளும் விதத்திலேயே அமைந்துள்ளன.

 நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவிலும், எடுகோள்களின் அடிப்படையிலான நிகழ்வுகள் மற்றும் நடைமுறையில் நிகழாத சம்பவங்கள் பற்றி கேள்வியெழுப்புவது தடுக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் காணப்படுகின்றன. இமாம் நவவியின் நாற்பது ஹதீஸ் தொகுப்பில் 9, 12 மற்றும் 30 ஆவது ஹதீஸ்கள் இதற்கான உதாரணங்களாகும். மேலும் ஷரீஆவின் நடைமுறைத் தன்மையானது, நபி (ஸல்) அவர்களின் பல்வேறு கூற்றுக்களில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள, மனித இயல்புகளோடு (பித்ராஹ்) ஒத்த பண்புகளில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. மனித இயழ்புகளோடு (பித்ராஹ்) ஒத்துச் செல்வதென்பது, கனவுகளோடும் கற்பனைகளோடும் இணைந்துச் செல்வதல்ல, மாறாக நடைமுறையுடன் ஒத்துச் செல்வதாகும். 

 இஸ்லாமியப் பொருளாதாரம், நிதியியல் மற்றும் வÛக சட்டங்களின் நடைமுறைத்தன்மை

 நடைமுறைத்தன்மையானது இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிப்படை தூன்களிலும், இது போன்று இஸ்லாமிய வணிகள சட்டங்களிலும் காணப்படுகின்றது. இது தனியுடமை மற்றும் பெதுவுடமை ஆகியவற்றின் நெகிழ்வுத்தன்மையுடைய இனைப்பில் காணப்படுகின்றது. இத்தகைய இனைப்பானது, முதலாளித்துவம் மற்றும் கம்யூனிஸம் ஆகியவற்றின் அதிகாரபூர்வமான அனுகு முறைக்கு அப்பால் நடைமுறை வாழ்வைப் பிரதிபளிக்கின்றது.

 மேலும் ஒரு மத்திற்குரிய, மறுஉலக வாழ்வில் மீட்சி பெறுவதற்கான அனைத்து கொள்கைகளுடனும், இஸ்லாமிய பொருளாதார மற்றும் நிதியியல் முறைமையானது, மனிதனுடைய இன்பம் மற்றும் செல்வத் திரட்டு ஆகியவற்றுக்கான பொருள்சார் தூண்டுதல்களை அங்கீகரித்து, அவனை இந்த லௌகீக வாழ்வில் எவ்வித அடக்குமுறைகளுக்கும் ஆட்படுத்தாமல், அவனது பொருள்சார் தூண்டுகளினூடாக, நற் செயல் புரிவோருக்கு சுவர்க்கத்தில் கிடைக்கக் கூடிய பொருள்சார் இன்பங்கள் பற்றிய ஓர் உயிர்ப்புள்ள விளக்கத்தையளித்து, அவனை நற்செயல்களின் பால் வழி நடத்துகின்றது.

 இஸ்லாமிய வியாபார சட்டங்களில், நடைமுறைத்தன்மையின் அர்த்தத்தை விளக்கவும், அவ்வியாபார சட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் அதன் பிரதிபலிப்பை விளக்கவும் ஒரு சில உதாரணங்களை நோக்குவது சிறந்ததாகும். 

 பறிமாற்றம் தொடர்பான இஸ்லாமிய சட்டங்களில், ஒரு வியாபார உடன்படிக்கையானது, அவ்வுடன்படிக்கை நிகழும் சந்தர்ப்பத்தில ;பௌதீக ரீதியாக வழங்கப்படக் கூடிய பொருட்கள, சொத்து தொடரபான உரிமை ஆவனங்கள் மற்றும் பதிப்புரிமைகள் மீது மடடுமே செல்லுபடியாகும். இவ்வண்ணம் பரிமாற்று ஒப்பந்தமானது, கடலிலிருந்து பிடிக்கப்படவிருக்கின்றன மீன்கள், வானத்திலிருந்து வேட்டையாடப் படவிருக்கின்ற பறவைகள் ஆகியவற்றின் மீது மேற்கௌ;ளப்படமுடியாது. 

 அதே போன்று, ஒருவர் தனக்கு உரித்தற்ற பொருளை அல்லது உரித்தாகவிருந்தும் அது தொடர்பான செயற்சுதந்திரமற்ற பொருளை விற்பனை செய்ய முடியாது. ஏனெனில் ஒரு வியாபார உடன்படிக்கை யானது, அவ்வுடன்படிக்கை சார் பொருளை பௌதீக ரீதியாக வழங்கப்படக்கூடிய நிலையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற பரிமாற்றம் தொடர்பான சட்டங்களில் ஓர் பொதுவான அம்சம் காணப்படக்கூடியதாக உள்ளது. அதாவது ஒரு வியாபார உடன்படிக்கையானது கைவசம் உள்ள பொருட்கள் மீது மட்டும், அவ்வுடன்படிக்கை நடைமுறைப்படுத்துவதில் இரு தரப்பினருக்கும் எவ்வித தடையும் இல்லை என்ற நிலையிலேயே மேற்கொள்ளப்பட முடியும்.

 எல்லா சட்டங்களுக்கும் விதிவிலக்குகள் காணப்படுவது போன்று, இக்குறிப்பிட்ட சட்டத்திற்கும் விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. விவரண அடிப்படை யிலான விற்பணை, மாதிரி அடிப்படையிலான விற்பணை மற்றும் 'ஸலாம்' ஒப்பந்தம் எனப்படும் தாமதிக்கப்பட்ட வழங்கலுடன் கூடிய விற்பணை என்பன அவற்றுற் சிலவாகும். எனினும் சாதாரண நிலைமைகளின் போது, பொருள் உடன் விநியோகிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும் அவ்விதிவிலக்கான விற்பனை ஒப்பந்தங்களானது, அக்குறிப்பிட்ட விநியோக தினத்தில் சந்தையில் பொதுவாகக் காணப்படக் கூடிய பண்டங்களின் மீது மட்டுமே மேற் கொள்ளப்பட முடியும். 

 அதே போன்று, சமூகம்சார் கடமைகளில், நட்டஈடு பெறப்படக்கூடிய உரிமை மீறல்கள் தொடர்பான ஷரீஆ சட்டங்கள், வஸ்துசார் இழப்புக்களின் மீது கவனம் nலுத்தும் அதே நேரம் உணர்வு ரீதியான, உளவியல் இழப்புக்களைப் புறக்கணிக்கின்றது, ஏனெனில் அவை உண்மையற்றவை என்பதற்காகவல்ல, மாறாக அவற்றின் இழப்புக்கள் பணரீதியாக அளவிடப்பட முடியாதவை. இவ்வண்ணம் இழப்பீடு பெறப்படக்கூடிய உரிமை மீறல்கள்ஃ குற்றங்கள் தொடர்பான ஷரீஆ சட்டங்களானது, இத்தகைய உணர்வுசார், உளவியல் மற்றும் கணக்கப்பட முடியாத பாதிப்புக்கள்ஃஇழப்புக்களை தண்டனைக் குரிய அதே நேரம் இழப்பீடு கோரப்பட முடியாத
குற்றங்களாகவே கருதுகின்றன. இதே தரத்தின் அடிப்படையிலேயே, இஸ்லாமியல் நிதியியலில் வட்டி தடை செய்யப்பட்டமையும் கருதப்படுகின்றது. ஒரு கடன் ஒப்பந்தமொன்றின் போது, கடன் பெறுனர் பெறக்கூடிய நன்மையும், கடன் வழங்குனரின் தியாகமும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்ததாகும் அல்லது ஊகங்களின் அடிப்படையிலன்றி அளவிடப்பட முடியாததாகும். இஸ்லாமிய சட்டவியல் கொள்கைகளில் வட்டியானது, கற்பனையில் நேரிடக்கூடிய ஒரு பண்பாட்டிற்காக, அக்கடனில் ஏற்படக்கூடிய அதிகரிப்பாகவே கருதப்படுகின்றது. 

 அதே நேரம் கடன் பெறுனருக்கு அக்கடன் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் இனங்கானப்பட்டாலும் அவை அளவிடப்பட முடியாதவையாகக் காணப்படுகின்றன. ஆகவே வழங்குனருக்கான நஷ்டஈடானது மறுமையில் சுவனத்தில் வெகுமதியாக அல்லாஹ்விடத்தில் சாட்டப்பட்டுள்ளது. கடன் வட்டியானது தடைசெய்யப்பட்டிருந்த போதும் பங்கு முகலீடானது, அதில் உண்மையான இலாப நட்டம் பகிரப்படுவதால், அனுமதிக்கப் பட்டதாகவே காணப்படுகின்றது.

 இதே நடைமுறைத்தன்மை, முயற்சியாளனுக்கும் நிதி வழங்குனருக்கு மிடையிலான உறவிலும் காணப்படுகின்றது. ஒரு முயற்சியாளனின் பங்களிப்பானது அம்முயற்சியின் இலாபப் பகிர்வில் இடமளிப்பதன் மூலம் அங்கீகரிக்கப்படும் அதேநேரம் அம்முயற்சியில் ஏற்படும் நட்டமானது முழுமையாக நிதி வழங்குனரால் ஏற்றுக் கொள்ளப்டும். ஏனெனில் நட்டம் என்பது மூலதனத்தில் ஏற்படுகின்ற ஒரு குறைவாகும், இங்கு முயற்சியாளன் மூலதனத்தில் எவ்வித பங்களிப்பையும் செய்யவில்லை, என அம்முயற்சிகளில் ஏற்படும் நட்டம் முயற்சியாளன் மீது சாட்டப்பட முடியாது. இஸ்லாமிய பிக்ஹ் சட்டங்களில் இதற்கான காரணமாக முன்வைக்கப்படுவது ளூ அக்குறிப்பிட்ட முயற்சியான்மையானது நட்டமடைகின்றபோது, அதில் முயற்சியானால் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பானது ஈடுசெய்யப்படாமல் காணப்படுகின்றமையாகும். ஆகவே இங்கு நடைமுறைத் தன்மையானது, முயற்சியாளர்களை முயற்சியாண்மைகளில் வெறும் இலாபப் பகிர்வு பங்குதாரர்களாக அல்லது வேளைக்கமர்த்தப்பட்ட ஊழியர்களாக ஈடுபட அனுமதியளிப்பதன் மூலம் பரதிபளிக்கப்படுகின்றது. ஏனெனில் இன்று நடைமுறை சமூகத்தில், அதிக இலாபம் பெறும் நோக்குடன் அதிக அபாயங்களை ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கும் அதே நேரம் அபாயங்களைத் தவிர்த்து நிலையான சம்பவங்கள் பெற விரும்புபவர்கள் காணப்படுகின்றனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.