Breaking News
recent

துபையில் தாருத் தவ்ஹீத் ஆலோசணை கூட்டம்!


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31.08.2012 மஃரிப் தொழுகைக்குப்பின் துபை, தேரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

பொருள்:

1. கடற்கரை தெருவில் நடைபெற்று வரும் பெண்கள் மதரஸா மேம்பாடு.

2. பிலால் நகர் பிரச்சார மைய கட்டுமானம்.

என இன்னும் பல...
தவ்ஹீத் இல்லம்

டேரா, நைஃப் ரோடு, அல் புத்தைம் பள்ளி (AL FUTTAIM MASJID) எதிர்புறம் அமைந்துள்ள டல்ஃப் (DULF) ஹோட்டல் பின்புறமுள்ள அல் ஜர்வானி பில்டிங், அறை எண்:109, இடைத்தளம். (MEZZANINE FLOOR)

Contact: Mr. Abdul Kader   055 2829759   Mr. Jamaludeen   055 2177618

"பிலால் நகர் இஸ்லாமிய‌ பிரச்சார மையம்" அமைக்கும் விசயத்தில் சிலர் முட்டுக்கட்டை ஏற்படுத்த எத்தனித்து வருவதாக கூறப்படுகிற இந்நிலையில், அமீரகத்தில் நடைபெறும் இந்த மசூரா அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
Unknown

Unknown

8 கருத்துகள்:

 1. தாருத் தவ்ஹீத்தின் இஸ்லாமிய பிரச்சார பணியை யார் முடக்க நினைத்தாலும் அவர்கள்தான் முடங்கிபோவார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நயவஞ்சகர்கள் என்பதை அதிரை தவ்ஹீத் சகோதரர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
  அப்படி முட்டுக்கட்டை போடுபவர்கள் யார் என்பதை விவாதிக்கவேண்டும்.
  அபு அஹ்மது தாஹிர் அதிரை

  பதிலளிநீக்கு
 2. //"பிலால் நகர் இஸ்லாமிய‌ பிரச்சார மையம்" அமைக்கும் விசயத்தில் சிலர் முட்டுக்கட்டை ஏற்படுத்த எத்தனித்து வருவதாக கூறப்படுகிற இந்நிலையில்//

  என்னது ? முட்டுக்கட்டையா ? எதுக்கு ?

  எதிர்க்கிறவங்க செல்வாக்கு சரிந்து கெடக்கோ ? அப்படின்னா அங்கேயில அந்த முட்டு(ம்)கட்டையை சொருவனும் !!

  பதிலளிநீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  வலைப்பூ நிர்வாகிகளுக்கு, இன்ஷா அல்லாஹ் துபையில் நாளை நடக்க இருக்கும் அதிரை தாருத் தவ்ஹீதின் அமர்வு, நீங்கள் அறிவித்தபடி "அவசர" அமர்வு அல்ல, இது வழக்கம் போல் நடைபெறும் மாதாந்திர அமர்வுதான். மற்றும் பிலால் நகர் இஸ்லாமிய பிரச்சார மையம் தொடர்பாக முட்டுக்கட்டை அது.. இது.. என்று விஷயத்தை பெரிதாக்காமல் அமர்விற்க்கான அழைப்பை மற்றும் பதிய வேண்டுகிறோம்.

  அப்துல் கபூர்
  நிர்வாக குழு உறுப்பினர்.
  ADT - துபை

  பதிலளிநீக்கு
 4. எதிர்ப்பில் வளர்வதே இஸ்லாம், எத்தகைய எதிர்ப்பும் தூய இஸ்லாத்தின் வளர்ச்சியே. எனவே, எந்த ரூப எதிர்ப்பையும் வரவேற்க தயாராகவேவுள்ளோம். என்றாலும் உங்களுடைய கற்பனை வளத்தை எங்களின் மாதாந்திர நிகழ்வுக்கு சூட்டி அழகுபார்ப்பது ரசிக்கும்படி இல்லை. குறைந்தபட்சம் கீழே தரப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம்.
  adiraiameen
  Member - ADT

  பதிலளிநீக்கு
 5. அஸ்ஸலாமு அலைக்கும்.

  அன்புமிக்க அதிரை ப்போஸ்ட் நிர்வாகிகளுக்கு,
  இப்பதிவின் கவன ஈர்ப்புக்காக நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு பிழையானது; அல்லது உள்நோக்கமுடையது. எனவே தலைப்பை மாற்றவும்.

  //"பிலால் நகர் இஸ்லாமிய‌ பிரச்சார மையம்" அமைக்கும் விசயத்தில் சிலர் முட்டுக்கட்டை ஏற்படுத்த எத்தனித்து வருவதாக கூறப்படுகிற இந்நிலையில், அமீரகத்தில் நடைபெறும் இந்த மசூரா அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது//

  "கூறப்படுவதாக" நீங்கள் குறிப்பிட்டிருக்கும் "முட்டுக்கட்டை" அதீதக் கற்பனையாகும். அப்படியே இருந்தாலும், அல்லாஹ்வின் துணையுடன் கட்டுக் கட்டாகப் பல நிஜ முட்டுக்கட்டைகளைத் தாண்டிவந்தவர்களுக்குக் கற்பனைகளைத் தாண்டுவதற்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்காமலா போகும்?

  பதிலளிநீக்கு
 6. "பிலால் நகர் இஸ்லாமிய‌ பிரச்சார மையம்" அமைக்கும் விசயத்தில் சிலர் முட்டுக்கட்டை ஏற்படுத்த எத்தனித்து வருவதாக கூறப்படுகிற இந்நிலையில், அமீரகத்தில் நடைபெறும் இந்த மசூரா அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.//
  அப்படியா? யாரு முட்டுக்கட்டை போட நினைக்கிறது...?

  பதிலளிநீக்கு
 7. அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
  அன்பு காக்காமார்களுக்கு, தலைப்பில் உள்நோக்கம் இல்லை. தலைப்பு மாற்றப்பட்டது.

  என்றபோதும்...முட்டுக்கட்டைக்கு சிலர் முயன்றுவருவதாகவே தகவல். இந்ததகவலையும் மசூராவில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நமது அன்பான வேண்டுகோள்!

  விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்பதை கவணப்படுத்தவே அப்படியொருதலைப்பு!!

  அப்படி முட்டுக்கட்டை இருக்க கூடாது என்பது நமது அவா; சத்திய எதிர்பாளர்களை எதிர்க்க அதிரைப்போஸ்ட் தயங்காது என்பதை காக்காமார்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

  பதிலளிநீக்கு
 8. நெறியாளருக்கு,

  எஙகளது கருத்தை பரிசீளித்து தலைப்பை மாற்றியமைத்தற்க்கு நன்றி.

  அப்துல் கபூர்
  நிர்வாக குழு உறுப்பினர்.
  ADT - துபை

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.