Breaking News
recent

அமெரிக்காவில் தமிழ் முஸ்லிம்களை ஒருங்கிணைத்த அதிரை சேக்தாவூத்!


அ.சேக்தாவூத் அவர்கள் இடது புறத்தில் இருமகன்களுக்கு மத்தியில் வெள்ளை சட்டை அணிந்து நிர்கிறார்.


அமெரிக்கா,டெக்சாசில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் ஒன்றுகூடி நோன்புப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.இந்த இந்த இன்றுகூடலுக்கு அதிரை சகோதரர்.அ.சேக்தாவூத் ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகிய டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள 'ப்ளேனோ' பள்ளியில் சுமார் 7,000 பேரும், மற்றொரு பகுதியாகிய ‘இர்விங்' பள்ளியில் சுமார் 5,000 பேரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகைக்குப் பிறகு இந்தியா மற்றும் இலங்கை மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த உலக தமிழ் முஸ்லிம்கள் ஒன்றுகூடி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சுமார் பத்து ஆண்டுகளாக இப்பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம்களை ஒன்றிணைத்து சமூக சேவை செய்து வரும் 'டீ.எப்.டபிள்யு நண்பர்கள்' அமைப்பின் சார்பில் அன்றிரவு 'கஸ்ரா' உணவகத்தில் நடைபெற்ற ஈத்- பெருநாள் விருந்தில் 200க்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிரை ஷேக்தாவூத் நிக‌ழ்ச்சிக்கான ஏற்பாடுக‌ளைச் செய்திருந்தார்.
நன்றி:தட்ஸ்தமிழ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.