அதிரையில் சாலை மறியல்: புகைப்படங்களுடன்...


புனிதமிகு ரமலான் மாதத்தில் வருடம் தோறும் ஏற்படுத்தப்படும் மின்வெட்டு இந்த வருடமும் நேற்று (08/08/2012) இரவு 09:30 மணி முதல் நள்ளிரவு 1:50 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிரை மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் அதிரை மின் வாரியத்தை தொடர்பு கொண்டபொழுது மதுக்கூரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் மின்சாரம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள் கூறினர். இதை உறுதி செய்ய மதுக்கூர் மின்சார வாரியத்தை தொடர்புக்கொண்டு கேட்டபொழுது இங்கு எந்த ஒருவிதமான மின் தடையும் இல்லை என்று கூறினர். 
அலட்சிய போக்குடன் பொய்யான தகவலை கூறிய அதிரை மின் வாரியத்தை கண்டித்து இளைஞர்கள் நமதூர் ECR ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ECR ரோட்டில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.
நன்றி:adiraithunder
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.