Breaking News
recent

இருளில் மூழ்கிய அதிரை;பதில் சொல்லாத மின்வாரியம்!


நேற்று(8-8-12) இரவு தராவிஹ் தொழுது முடித்தவேலையில், சுமார் 10.15 மணிக்கு மழை 20 நிமிடங்கள் பெய்தது. அது ஒன்றும் பெரும் மழையல்ல.
 ஆனால், அதனை தெடர்ந்து மின்வெட்டு தொடங்கியது. இதனால், தராவிஹ் தொழுகை முடித்து வீடு திரும்பவேண்டிய முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
மழை நின்றும் பல மணி நேரங்கள் காணாமல் போன மின்சாரம் மீண்டு வரவில்லை. என்ன சேதி என்று மின் அலுவலகத்தை தொலைபேசியில் (04373 242444) அழைத்தால், “நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் வேறுகாலில்( எந்த கால்னு ஒன்னும் புரியல) உள்ளார்” என்று பல மணி நேரமாக கிளிப்பிள்ளையாக சொன்னது.
பின்பு, அந்த வார்த்தை நமக்கு சடப்பை- அழுப்பை தந்திருக்குன்னு நினைத்ததோ என்னவோ, “இந்த தொலைபேசி எண் தற்காலிகமாக உபயோகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது” என்று சொன்னது.
அப்படி என்னதான் மணிக்கணக்கா ”வேறு காலில்” பேசிக்கிட்டு இருந்தாங்களோ தெரியல. அப்படி பிஸியா இருந்த போன் எப்படி “தற்காலிகமாக நீக்கப்பட்டிச்சுனும் தெரியல.
மின்சாரம் இருக்கும் போது போன் போட்டுபாருங்க…அடிக்கும்,அடிக்கும் விரும்புனா எடுப்பாங்க. அப்புறம் கரெண்ட் போனது அடிச்சுப் பாருங்க மேலே சென்ன வசங்களைதான் சொல்லும்.
நமக்கு கரெண்ட் போனா அவங்களுக்கும்தான் போகும். நாம எதுக்கு போன் போட்றோம் “மாப்பள நல்லா இருக்கியலா..வீட்ட எல்லாங் நல்லா இருக்காங்களா…அப்பறம் என்ன சாப்டிய…னு கேட்கவா போட்றோம். “சார் எப்ப கரெண்ட் வரும்னு” ஒரு வரி கேள்வியத்தான் கேட்கபோறோம்.
இல்லனு சொன்னா எதாவது மின்சாரம் சம்மந்தமா அவசர தகவல் சொல்லப்போறேம்.
மின் இணைப்பில் எங்காவது ஃபால்ட்- பிரச்சினை இருக்கலாம். அதைவாவது சொல்லம்ல.
அதுக்கு சடப்பு- அழுப்புபட்டு போன் எடுக்காம இருந்தா என்ன எப்படி?
மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தி,அதனால் கட்டப்படும் பணத்தில் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிது என்பதை கொஞ்மாவது மனதில் ஏற்றுங்கள்.பிளீஸ்.
இந்த செய்தி அடிக்கப்பட்டு பின்பு, இரவு1.30மணிக்கு மீண்டது மின்சாரம். உடனே, மீண்டும் போன் போட்டேன். ஒருவர் எடுதார் “சார் எப்ப கரெண்ட் வரும்னு போன் போட்டேன்.எடுக்கல இப்ப கரெண்ட் வந்துடிச்சுனு” சொல்லிட்டு போன வச்சுட்டேன்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.