Breaking News
recent

பரபரப்பு செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்!

தேசத்தின் மனசாட்சியாக விளங்கும் ஊடகங்கள், பரபரப்பான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருப்பது பெருமைக்குரிய விஷயம். ஊடகங்கள் சில நேரங்களில் பரபரப்பான செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றை தவிர்க்க வேண்டும்.

நமது சமுதாயத்தையும் நாட்டையும் பிரிக்கும் வகையில் இல்லாமல் கட்டுப்பாடுடன் செய்திகளை வெளியிடவேண்டும். நமது நாடு தற்போது கடினமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

நமது சமுதாயத்தில் கடந்த சில மாதங்களாக துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சமயங்களில் ஊடகங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. செய்திகள் மற்றும் கருத்துக்கள் உண்மையாகவும், நியாயமாகவும், சமநிலையிலும் இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Unknown

Unknown

1 கருத்து:

  1. இதைத்தான் பல நாட்களாக நாங்களும் சொல்கின்றோம்..
    சிங்கு சொன்னாத்தான் கேட்போம், ஊர்வாசிகள் சொன்னாலேல்லாம் கேட்கமாட்டோம் என்றால் நாங்கள் என்னத்த செய்வது..

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.