Breaking News
recent

செல்போன்களை இரவல் கொடுக்க வேண்டாம் வலை தளம் கம்ப்யூட்டரில் அந்தரங்க தகவல்களை பதிவேற்ற முடியும்!

கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் சொசைட்டி கோவை கிளை அமைப்பு தலைவர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாணவ-மாணவிகளிடையே கணினி தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை அம்சங்கள் குறித்து விளக்கினார்.
சமூக வலைத் தளங்களை கையாளும்போது அதிக கவனமும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். அந்தரங்க தகவல்களை கணினி, மொபைல், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். கணினி, கைப்பேசிகளை யாரிடமும் இரவல் தருவது நல்லதல்ல. வலைத்தளத்தில் பதிவாவது எதுவுமே அழியாது.

உங்களுடைய பிறந்த தேதி, உங்கள் தாயார் பிறந்த தேதி இரண்டு இருந்தாலே போதும், உங்களுடைய ஏ.டி.எம். கணக்கு, கடன் அட்டைச் செயல்பாடு ஆகியவற்றை தவறான வழியில் சமூக விரோதிகள் பயன்படுத்தவோ, முடக்கவோ முடியும். அறிமுகமில்லாத குறுந்தகவல்கள், மெயில்களுக்கு நீங்கள் பதிலளிக்கவோ, திறந்து பார்க்கவோ செய்வது ஆபத்தில் முடியும். கணினியில் எண்டர் எனும் பொத்தான் தான் படுபயங்கரமானது.

புத்தி நுட்பத்தோடும், எச்சரிக்கையோடும் எண்டர் பட்டனை கையாள வேண்டும் என்றார்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.