Breaking News
recent

யார் என்று தெரியாமலேயே தந்தையை திருமணம் செய்த மகள்

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள டாய் லெஸ் நகரைச் சேர்ந்தவர் வலேரி ஸ்புரூயில்ஸ். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. இவர் பெர்சி என்ற நபரை திருமணம் செய்து இருந்தார்.

அவர் லாரி டிரைவராகவும், வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு பெர்சி இறந்து விட்டார். அதன்பிறகு தன்னுடன் கணவராக வாழ்ந்தவர் தனது தந்தை என அறிந்து கொண்டார்.

இது வலேரிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் அறையில் சீப்பில் இருந்த பெர்சியின் தலைமுடியை டி.என்.ஏ. பரிசோதனை செய்து அவர் தனது தந்தை என்பதை உறுதி செய்தார். வலேரியின் தாய் கிறிஸ்டினா ஒரு ஜாலி பேர்வழி. பல ஆண்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர். இந்த நிலையில்தான் பெர்சி தனது 15 வயதில் கிறிஸ்டினாவை சந்தித்து அவருடன் உறவு வைத்துள்ளார். அப்போதுதான் வலேரி பிறந்து இருக்கிறார். இவரை அவரது தாயார் கிறிஸ்டினா வளர்க்கவில்லை. பிறந்த 3 மாதத்தில் இருந்தே தாத்தா-பாட்டிதான் வளர்த்து வந்தனர்.

இவரை மட்டுமல்ல. கிறிஸ்டினா பெற்ற பல குழந்தைகளையும் அவர்கள்தான் பராமரித்தனர். எனவே, அவர்களைதான் வலேரி தனது பெற்றோராக கருதி வந்தார். இதற்கிடையே கிறிஸ்டினா அவ்வப்போது தனது பெற்றோரை பார்க்க வருவார். ஆனால் அவரை தாய் என அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. மாறாக குடும்ப நண்பர் என சொல்லி வைத்தனர்.

வலேரி 9 வயதாக இருந்தபோது கிறிஸ்டினா இறந்து விட்டார். அப்போதுதான் இவர் அவர் தனது தாயார் என தெரியவந்தது. இதுபோன்று பல அதிர்ச்சி சம்பவங்களை வலேரி தனது வாழ்க்கையில் சந்தித்து வந்தார்.

கணவராவதற்கு முன்பு பெர்சியை தன்னை வளர்த்த குடும்பத்தினருடனோ, கிறிஸ்டினாவுடனோ வலேரி பார்த்ததில்லை. எனவே, அவர் தனது தந்தை என்று தெரியாமலேயே திருமணம் செய்து மனைவியாக வாழ்ந்து விட்டார். மேல்நாட்டு கலாச்சார உறவுமுறைகளில் இது போன்ற சீர்கேடுகள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.