அதிராம்பட்டினம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

டெங்கு காய்ச்சலில் பெண் இறந்ததாக தகவல் பரவியது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் பகுதியை சேர்ந்த மீனவர் ராமமூர்த்தி. இவரது மனைவி மாதவி (வயது26). இவருக்கு 2 நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதவியை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு உடல் நலத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாதவியை பரிசோதித்த டாக்டர் உடனடியாக கே.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தார். டாக்டர் கூறியபடி திருச்சிக்கு மனைவியை அழைத்து செல்லும் போது, மாதவி இறந்து விட்டார்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சலில் மாதவி இறந்து விட்டதாக தகவல் பரவியதால் ராஜாமடம் பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இது குறித்து பட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் பாம்பன் கூறியதாவது:- ராஜாமடம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க வெட்டிய பள்ளத்தில் தேங்கிய நீரில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.இ.எஸ். கொசு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.