அஹ்லுஸ் ஸுன்னாக்களுக் கெதிராக ஈரான் அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான கெடுபிடிகளின்வரிசையில் ஈரானின் அஹ்லுஸ் ஸுன்னா தலைவரின் ஹஜ் பயணத்திற்கு ஈரான் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
அஹ்லுஸ் ஸுன்னாக்களின் பேச்சாளரும் இமாமும் ஸாஹிதான் நகரத்தில் அமைந்துள்ள தாருல் உலூம் பல்கலைக்கழகத்தின் தலைவரும் முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினருமான ஷெய்க் அப்துல் ஹமீத் இஸ்மாயீல் அஸ் - ஸஹியே இவ்வாறு தடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ஈரான் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் உத்தியோகபூர்வ இணையத்தளமான ஸுன்னா ஒன்லைன் வெளியிட்டுள்ளது.
ஈரானில் அஹ்லுஸ் ஸுன்னாவல் ஜமாஆத்தைச் சேர்ந்த பல மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகளின் ஹஜ் பயணத்திற்கு தடைவிதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபூர்வ கணிப்பின் படி ஈரானில் வாழும் அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 14 -19 மில்லியனாகக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை ஈரானின் மொத்த சனத் தொகையில் 20 - 28 வீதமாகும். ஈரான் ஹிஜ்ரி பத்தாம் நூற்றாண்டு வரை அஹ்லுஸ் ஸுன்னா நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் அரசாங்கத்தினால் அஹ்லுஸ் ஸுன்னாக்களை வதைக்குமாறும் கைதுசெய்யுமாறும் அவர்களின் மஸ்ஜிதுகள் தாக்குமாறும் கட்டளையிடுகின்ற ஆவணங்கள் சிலவற்றை விகிலீக்ஸ் அண்மையில் வெளியிட்டிருந்தது.
ஈரானின் தெஹ்ரான், அஸ்பஹான், கர்மான் மற்றும் ஷீஆக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரங்களில் அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கு மஸ்ஜிதுகள் இல்லை என்பது ஒரு பிரபலமான விடயமாக உள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்திற்கு சொந்தமான பாடசாலை ஒன்றில் பெருநாள் குத்பாவையும் தொழுகையும் மேற்கொள்வதற்கு அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களுக்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்டது. இதன்காரணமாக அவர்கள் தமது தொழுகைகளை வீடுகளிலே தமது தொழுகைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
ஏனைய நகரங்களிலுள்ள மக்களும் தமது பெருநாள் தொழுகையினை வீடுகளிலேயே தொழுது வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி:மீள்பார்வை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்